கவிஞர் இரா. இரவி
வாழ்க்கைக் குறிப்பு !
பிறந்த நாள் : 12-11-1963
அப்பா : வீ.
இராமகிருஷ்ணன்
அம்மா : இரா. சரோஜினி
மனைவி : ஜெயச்சித்ரா
மகன்கள் : பிரபாகரன்,
கௌதம்
தம்பி : கண்ணபிரான்
தங்கை : கலையரசி
*****
பிறப்பு, வளர்ப்பு அனைத்தும் மதுரை வடக்கு மாசி வீதி. படிப்பு மேல்நிலை இரண்டாம் ஆண்டு. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்
அஞ்சல்வழியில் B.Com. வணிகவியல் பட்டப்படிப்பு மூன்று ஆண்டுகள் பயின்றார் .
கல்லூரி வாழ்க்கை இல்லை
என்ற ஏக்கத்தை பூர்த்தி செய்யும் விதமாக ஹைக்கூ கவிதைகள் பல்கலைக்கழகங்களிலும்,
கல்லூரிகளிலும் பாடநூலில் இடம் பெற்றது.
மகன் பிரபாகரனுக்கு தியாகராசர் கல்லூரியில் (BCA) படித்த போது 10 ஹைக்கூ கவிதைகள் மனப்பாடப் பகுதியில் வந்த்து. வீட்டில் கவிதை படிக்கச் சொன்னால் படிக்காத
மகன், மதிப்பெண்ணிற்காக படிக்க நேர்ந்தது.பிரபாகரன் சென்னை
பனிமலர் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .முதல்
ஆண்டில் விடுதியில் முதல் மாணவராக மதிப்பெண்கள் பெற்று ரூபாய் 10000
பத்தாயிரம் பரிசு பெற்றுள்ளார் .
தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் 1982ஆம் ஆண்டு
எழுத்தராக, திருமலை நாயக்கர் அரண்மனையில் பணியில் சேர்ந்தார். 01-04-1984ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத் துறையின் கீழ் வந்தது. 26.01.1992 அன்று குடியரசு தின விழா சிறந்த அரசுப்
பணியாளருக்கான விருதினை அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த திருமதி கிரிஜா வைத்தியநாதன்
இ .ஆ .ப.அவர்களிடமிருந்து பெற்றுள்ளார்.
சுற்றுலாத்துறை
செயலராக இருந்த முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்களிடமிருந்தும்
,சுற்றுலாத்துறை ஆணையராக இருந்து திரு .இராசாராம் இ .ஆ .ப .
அவர்களிடமிருந்தும் பாராட்டை பெற்றுள்ளார்.2009ஆம் ஆண்டு முதல்
உதவிச்சுற்றுலா அலுவலராகப்
பதவி உயர்வு பெற்று, மதுரை விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அமெரிக்கா மேரிலேண்டில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம்
மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி மகிழ்ந்தது. ஹைக்கூ திலகம், கவிமுரசு,
கவிச்சூரியன், கவிச்சிங்கம் என்று பல்வேறு விருதுகள் பெற்ற போதும் ‘கவிஞர்’ என்பதை
மட்டுமே பயன்படுத்தி வருபவர்.
உலகம் போற்றும் மாமனிதர் அப்துல் கலாம் அவர்கலை அய்ந்து முறை
சந்தித்து மகிழ்ந்தவர். அவர் அனுப்பிய பல
மடல்களை பொக்கிசமாக பாதுகாத்து வருபவர்.
14வது நூலான கவியமுதம் நூலிற்கு மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள்
மதிப்புரையை தன் கையெழுத்திலேயே எழுதி அனுப்பி உள்ளார்.
கவிமலர் டாட் காம் www.kavimalar.com என்ற இணையத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி
தொடர்ந்து தொய்வின்றி பயன்பாட்டில் உள்ளது. பல இலட்சம் வாசகர்கள் பார்த்து
உள்ளனர். உலகப்புகழ் இணையமான லங்காஸ்ரீ
டாட் காம் www.lankasri.com உள்ளிட்ட பிரபல
இணையங்கள் யாவும் கவிமலர் இணையத்திற்கு இணைப்பு வழங்கி உள்ளனர்.
மதுரை யாதவா கல்லூரியில், பாடத்திட்ட தேர்வுக்குழு உறுப்பினராக
இருந்துள்ளார். உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை
நட்ததிய பல்வேறு கருத்தரங்குகளில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் பல வாசித்து
பாராட்டு சான்றிதழ்கள் பெற்று உள்ளார்.
300க்கும் மேற்பட்ட நூல்களுக்கு விரிவான விமர்சனம் இணையத்தில் பதிவு
செய்துள்ளார்.
இன்று பிரபலமாக இருக்கும் முகநூலில் 2010ஆம் ஆண்டே இணைந்து
அதிகபட்சமான 5000 நண்பர்களையும், 5800 பின்தொடர்பவர்களையும் கொண்டு https://www.facebook.com/ rravi.ravi முகநூலில் முத்திரைப் பதித்து வருகிறார். தினந்தோறும் பதிவுகள் பதிந்து நண்பர்களை
மகிழ்வித்து வருகிறார். www.eraeravi.blogspot.in என்ற வலைப்பூவையும் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி
தினந்தோறும் கவிதை, கட்டுரை மட்டுமல்ல, பங்கு பெற்ற விழாக்களின் புகைப்படங்களையும்
பதிவு செய்து ஆவணப்படுத்தி வருகிறார்.
உலக அளவில் இணையம் சென்றடைவதால் இலண்டனில் பொன் பாலசுந்தரம்,
ஐ.தி. சம்மந்தன், ஜெர்மனியில் தம்பி புவனேந்திரன், விக்னா பாக்கியநாதன், பாரிசில்
புதுவை நாகராசன் ஆகியோர் மட்டுமல்ல , நார்வேஎன் .எஸ் .பிரபு, சிங்கப்பூர், மலேசியா என்று பல்வேறு
நாடுகளில் இலக்கிய நண்பர்களைப் பெற்று உள்ளார்.
இதுவரை எந்த வெளிநாடும் செல்லாவிட்டாலும் வெளிநாடுகள் முழுவதும் இலக்கிய
நண்பர்களை இலக்கியத்தால் பெற்று உள்ளார்.
புகழ்பெற்ற வானதி பதிப்பகத்தின் பெருமைமிகு வெளியீடுகளாக ஆயிரம்
ஹைக்கூ, புத்தகம் போற்றுதும், கவியமுதம் என்ற மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயிரம் ஹைக்கூ நூல் 1000 படிகள், தமிழக
நூலகங்களில் இடம் பெற்றுள்ளது. இரண்டாம்
பதிப்பும் வெளிவந்து விட்டது. 15ஆவது நூல்
தயாரிப்புப் பணி நடந்து வருகின்றது.
15-10-2015 அப்துல் கலாம் பிறந்த நாளன்று ஸ்ரீ மீனாட்சி அரசினர்
கல்லூரி, டோக் பெருமாட்டி கல்லூரி, மீனாட்சி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மூன்றிலும் பேசியதை
பெருமையாகக் கருதுகின்றார்.
உதவி சுற்றுலா அலுவலர் பதவியில், சுற்றுலாத்துறையின் மூலம் நடத்தும்
உலக சுற்றுலா தினம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களிலும், கருத்தரங்குகளிலும்
தொகுப்பாளராக இருந்து முத்திரை பதித்து வருகிறார். . பொதிகை, ஜெயா, கலைஞர் தொலைக்காட்சிகளில்
நேர்முகம் ஒளிபரப்பாகி உள்ளன.
பெரியார் பெருந்தொண்டர் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் திரு.பி.வரதராசன் அவர்கள் மாணவராக
இருந்த போது தன்னை பகுத்தறிவுப் பாதைக்கு மடைமாற்றம் செய்ததை நன்றியோடு
குறிப்பிடுகின்றார். இலக்கிய ஆர்வத்திற்கு
பகுத்தறிவுப் பாதையும் ஒரு காரணம் என்கிறார்.
ஈடில்லாக்கவிஞர் ஈரோடு தமிழன்பன் 80வது பிறந்த நாள் விழாவில்
எழுத்தோலை விருது பெற்றுள்ளார்.
முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள், “இரவியிடம் புலிப்பால்
கேட்டாலும் கொண்டு வந்து விடுவார், புலிப்பால் இரவி” என்று மன்னர் திருமலை
நாயக்கர் கல்லூரியில் பேசும் போது குறிப்பிட்டதை மிகப்பெரிய விருதாகக்
கருதுகின்றார். அதே கல்லூரியில் நடந்த
இறையன்பு படைப்புலகம் கருத்தரங்கிற்கு தலைமை வகித்த நாளை மறக்க முடியாத மகிழ்வான
நாள் என்கிறார். முதுமுனைவர்
வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் பாக்யா வார இதழில் எழுதியதை மிகவும் பெருமையாக கருதுகின்றார் .
தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு
பல்வேறு விழிப்புணர்வு பட்டிமன்றங்களில் பேசி வருகிறார்.
பொதிகை உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் மதுரை வானொலியில் பட்டிமன்றம்
ஒளிபரப்பாகி உள்ளன. தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களைப் போலவே
பேச்சு, எழுத்து இரண்டு துறையிலும் முத்திரை பதித்து வருகிறார். இலக்கிய
குரு என்று தமிழ்த்தேனீ இரா. மோகன்
அவர்களை குறிப்பிடுகின்றார்.தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் சாகித்ய அகதமி
சார்பில் தொகுத்த ஆயிரம் ஹைக்கூ நூலில் கவிஞர் இரா .இரவியின் 10 ஹைக்கூ
கவிதை இடம் பெற்றுள்ளது .தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் சமிபத்தில்
எழுதியுள்ள கனவெல்லாம் கலாம் தொகுப்பு நூலில் கவிஞர் இரா .இரவியின்
கட்டுரையும் கவிதையும் இடம் பெற்றுள்ளன .
சிறந்த நூல்களுக்கான பரிசை கவிதை உறவு உள்பட பல அமைப்புகளில் பெற்றுள்ளார் .கலைமாமணி ஏர்வாடி
எஸ்
.இராதா கிருஷ்ணன் அவர்கள் கவிதை உறவு இதழில் மனத்தில் பதிந்தவர்கள்
பகுதியில் மிகச் சிறப்பாக எழுதியதை நன்றியுடன் குறிப்பிடுகின்றார் .
கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தலைமையில் பல
கவியரங்கங்களில் கவிதை பாடி கை தட்டல் பெற்றுள்ளார். மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலராக இருந்து
மாதம் ஒரு நாள் கவியரங்கில் கவிதை பாடி வருகிறார்.
தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலராக இருந்து, எழுத்தாளர்,
வாலியின் நண்பர் திருச்சி சந்தர், திரு. இராஜராஜன் அவர்களுடன் இணைந்து 110
மாதங்கள் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தி உள்ளார்.
தூத்துக்குடி
பன்னாட்டு வானொலியில் இவரது கவிதைகள் ஒலிபரப்பாகி வருகின்றது.தாளம்
,தீபம் ,மிர்ச்சி என்ற பண்பலை வானொலியிலும் இவரது கவிதைகள் ஒலிபரப்பாகி
உள்ளது
இரா .இரவியின் ஹைக்கூ கவிதைகளில் பன்முகப் பார்வை என்ற தலைப்பில் மதுரை
வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் க
.செல்வக் குமார் ( பார்வையற்றவர் ) ஆய்வு செய்து ஆய்வேடு வழங்கி உள்ளார் .
பேராசிரியர் முனைவர் மு .பாண்டி அவர்களை நெறியாளராகக் கொண்டு செல்வன் லெ. சிவசங்கர் அவர்கள் ( M.PHILL ) ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக " கவிஞர் இரா .இரவியின் ஹைகூக் கவிதைகள் " என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பித்து உள்ளார்
அறிஞர் மென்மேலும் புகழுடன் வாழ வாழ்த்துகள்
பதிலளிநீக்குதொடருங்கள்
http://www.ypvnpubs.com/
பதிலளிநீக்குநன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி