கலாமின் கனவுத் தோட்டம் ! நூல்ஆசிரியர் : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
கலாமின் கனவுத்
தோட்டம் !
நூல்ஆசிரியர் : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நூல்ஆசிரியர் : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
*****
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி ) லிட்
41-b,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் ,
அம்பத்தூர் ,சென்னை .600 098 .
பேச 26241288.
பக்கம் 77 விலை 70 ரூபாய்
41-b,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் ,
அம்பத்தூர் ,சென்னை .600 098 .
பேச 26241288.
பக்கம் 77 விலை 70 ரூபாய்
நூலாசிரியர் கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் அவர்கள் புனித மரியன்னை
மேல்நிலைப்பள்ளியில் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியப்
பணியும் செய்து வருபவர். முதுமுனைவர் வெ.
இறையன்பு இ.ஆ.ப. அவர்கள், பாக்யா வார இதழில் பயணச்சுவடுகள் தொடரில் குறிப்பிட்ட
வைர வரிகள் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
“சந்திரன் போல மாணவர்களை வழிநடத்தும் மேன்மையான
தமிழாசிரியர்களைச் சந்திக்கும் போதெல்லாம் தமிழின் எதிர்காலம் குறித்து நாம்
பயப்படத் தேவையில்லை என்றே தோன்றுகிறது”
ஆம்,
உண்மை. இனிய நண்பர் கவிஞர் ஞா. சந்திரன் சராசரி தமிழாசிரியர் அல்ல, சாதனை
தமிழாசிரியர். கலாமின் கனவுத் தோட்டம்,
கலாம் பற்றிய சுருக்க வரலாறு, வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் என அனைத்தும்
ஆவணப்படுத்தி உள்ளார். இன்றைய இளைய
தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
புகழ்பெற்ற
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் பெருமைமிகு வெளியீடாக வந்துள்ளது. நூலின் வடிவமைப்பு அச்சு, தரமான தாள்கள் என
சிறப்பாக வந்துள்ளது, பாராட்டுக்கள்.
மாமனிதர்
கலாம் பற்றிய நூலை அவருக்கே காணிக்கை ஆக்கி இருப்பது நல்ல பொருத்தம். இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா. விஜய
அவர்களின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரண்மாக அமைந்து உள்ளது. கலாம் பற்றிய கவிதை மிக நன்று.
பெயர்
அவுல் பக்கீர் ஜைனுல்லாபுதீன் அப்துல் கலாம் என்பதன் சுருக்கமே ஏ.பி.ஜெ. அப்துல்
கலாம். பிறப்பு 15-10-1931 என்று தொடங்கி
அவர் பெற்ற விருதுகள், எழுதிய நூல்கள், வாழ்வின் முக்கிய நிகழ்வுகள்.
பணத்தேவைக்காக,
தான் ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை விற்க முனைந்தார். ஆனால், பழைய புத்தகக்கடைக்காரரோ, புத்தகத்தை
அடகாக வைத்துக் கொள்கிறேன். பணம் வந்ததும்
தந்து மீட்டுக் கொள்ளச் சொல்லி உதவியதை நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மாமனிதர்
அப்துல் கலாம் அவர்கள், அக்கினிச் சிறகுகள் நூலில் குறிப்பிட்ட தகவல்களில்
முக்கியமான தகவல்களை சுருக்கமாக வழங்கி உள்ளார்.
விமானத்தில்
பயணிக்கும் போது சாதாரண வகுப்பே போதும், உயர்வகுப்பு வேண்டாம், அது கட்டணம் கூடுதல்
என்பதற்காக மறுத்தவர் கலாம் என்ற தகவலும் நூலில் உள்ளது.
மதுரையில்
நடந்த ஒரு நிகழ்வில் சொகுசு நாற்காலி வேண்டாம், சாதாரண நாற்காலி போதும் என்று
சொல்லி அமர்ந்த நிகழ்வும் உள்ளது.
குழந்தைகளை நேசித்த விதம், மனதில் தன்னம்பிக்கையோடு செயல்பட்ட குணம், ஊழல்
இல்லாத இந்தியா வேண்டும் என்று விரும்பிய எண்ணம், பாதுகாப்பு வீரரின் மீது காட்டிய
மனிதநேயம், மாமனிதர் கலாம் அவர்களின் கல்விக்காக சகோதரி, தன் நகை கொடுத்து
உதவினார், பின்னர் அடகிலிருந்த நகையை மீட்டுத் தந்த நிகழ்வு அக்கினிச் சிறகுகளில்
நூலில் உள்ள பல தகவல்களும் அவரது மறைவிற்கு பின் செய்தித்தாளில் வந்த செய்திகளையும்
தொகுத்து நூலாக வழங்கி உள்ளார்.
மாமனிதர்
அப்துல் கலாம் பற்றி மேடையில் பேச விரும்புபவர்களுக்கும், தன்னம்பிக்கை பெற
விரும்பும் மாணவர்களுக்கும் பயன் தரும் நூல்.
கலாமின்
அம்மா, கலாம் கேட்க, கேட்க சப்பாத்தி தந்து விட்டு, அவர் பசியோடு உறங்கியதை அண்ணன்
எடுத்து இயம்ப, பின்னர் அறிந்து, தாயின் பாசம் கண்டு கலாம் கண்கலங்கி நெகிழ்ந்த நிகழ்வு
நூலில் உள்ளது.
அக்னிச்
சிறகுகள் நூலில் உள்ள பல செய்திகள் இந்த நூலில் உள்ளது. அக்னிச் சிறகுகள்
படிக்காதவர்களுக்கு புதிய தகவலாக அமையும், படித்தவர்களுக்கு திரும்ப அசை போட
உதவும்.
அவர்
வாழ்வில் நடந்த நிகழ்வுகளை சிறுசிறு துணுக்குகளாக வழங்கி உள்ளார். படித்ததும் மனதில் அப்படியே பதிந்து விடுகின்றது.
மனிதர்களில்
மாணிக்கமாக விளங்கிய மாமனிதர். குழந்தை
உள்ளம் படைத்த பெரிய மனிதர். வள்ளுவரின் வாக்குப் போல வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்.
“தோன்றின் புகழோடு தோன்றுக...” குறளுக்கு இலக்கணமானவர். எளிமை, இனிமை, நேர்மை என்பதை வாழ்வின் தாரக
மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து வரலாறு படைத்துள்ள கலாம் அவர்களீன் பிம்பத்தை மேலும்
உயர்த்தும் விதமாக அவரின் புகழ் பரப்பும் விதமாக படித்ததை, கேட்டதை, அறிந்ததை,
பார்த்ததை, நூலாகத் தொகுத்து வழங்கி உள்ளார்.
பறவையைக்
கண்டான், விமானம் படைத்தான் என்ற கவியரசு கண்ணதாசன் வைர வரிகளுக்கு ஏற்ப பறவை
பறப்பதை கண்ணுற்ற கலாம் அவர்கள் விஞ்ஞானியாக உருவெடுத்த விதம் நூலில் உள்ளது.
எடை
குறைவான செயற்கைக் கால்கள் வடிவமைத்து அதனை அணிந்து போலியோவால் பாதிக்கப்பட்ட
மாற்றுத் திறனாளிகள் எளிதாக நடந்து வருவதைக் கண்டு மகிழ்ந்தவர் கலாம் என்ற தகவலும்
நூலில் உள்ளது.
பதவி
ஏற்பு விழா காண வந்த உறவினர்களின் செலவை அரசு ஏற்க முன்வந்த போதும் தன் சொந்த
பணத்தை செலவழித்த நிகழ்வு நூலில் உள்ளது.
கலாம்
வியந்த கதை, திருப்பதியில் விதிகளை மதித்து பதிவேடு கொண்டு வரச்சொல்லி கையொப்பம்
இட்டது. இப்படி பல நிகழ்வுகள் உள்ளன.
அவருடைய
சிந்தனை, பொன்மொழி நூலின் இறுதியில் உள்ளது.
இனிய நண்பர் கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் அவர்களும் நானும் தமிழ்த்தேனீ
இரா. மோகன் அவர்களும் மாமனிதர் கலாம் அவர்கள், மதுரைக்கு வந்திருந்த போது,
அரவிந்த் கண் மருத்துவமனை இல்லத்தில் தங்கி இருந்த போது நேரடியாக சந்தித்து பேசி
மகிழ்ந்தோம். அவர் மீதான அன்பின் காரணமாக
அவர் பற்றிய செய்திகளை உற்று நோக்கி தொகுத்து நூலாக்கி உள்ளார்.
இந்த நூல் அடுத்தடுத்த பதிப்புகள் வரும் என
உறுதி கூறலாம். அடுத்த பதிப்பில்
அட்டைப்படத்தை மாற்றுங்கள். மாமனிதர்
கலாம் படங்கள் இணையத்தில் நிறைய உள்ளன.
கன்னத்தில் கை வைத்து சோகமாக இருப்பது போல உள்ளது. உற்சாகமான படமாக மாற்றி
விடுங்கள்.
.
கருத்துகள்
கருத்துரையிடுக