ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

அர்த்தமில்லை 
மண் பார்க்கச் சொல்வதில் 
விண்வெளியில்   பெண்கள் !

தயங்குவதில்லை 
தடைகள் கண்டு 
எறும்புகள் !

ஒழிந்தது தந்தி
ஒழியுங்கள் 
வதந்தி !

மேகம் மறைத்த 
நிலாக்கள் 
முகமதியர் !

கவிதையே 
கவிதை ரசித்தது 
என்னவள் !

மரம் கனி தந்தது 
கல் எறிந்தவனுக்கு
மனிதன் ?

தேசமெங்கும் இருப்பதால் 
தேசியப் பறவையோ ?
கொசு !      

தேயவுமில்லை வளரமில்லை 
தேய்பிறையில் வேண்டாம் எனல் 
மூடநம்பிக்கை !
.
தெரியவில்லை அடையாளம் 
தப்பித்தேன் அறுவையிடம்
தலைக்கவசம் !

இலங்கையில் விசித்திரம் 
கொலைகளை   விசாரிப்பது 
கொலையாளியே !

உடைக்காமலே பெருங்கல்
சிறுகல்லானது
ஆற்றின் உருட்டலால் !

பத்துப் பொருத்தம் பார்த்து 
முடித்த இணைகள் 
மணமுறிவு வரிசையில் !

யாரோ என்று 
பயந்தான் சிறுவன் 
நிழல் கண்டு !

கருத்துகள்