ஆழ்ந்த இரங்கல் !

ஆழ்ந்த இரங்கல் !
திறனாய்வுச்செம்மல் எம் .எஸ் .தியாக ராஜன் அவர்கள் மறைந்து விட்டார் என்ற தகவல் அதிர்ச்சியாக இருந்தது .கவிஞர் வசீகரன் குறுந்தகவல் அனுப்பி இருந்தார் .கவிஞர் கன்னிக் கோவில் இராஜா மின் அஞ்சல் அனுப்பி இருந்தார். எம் .எஸ் .தியாக ராஜன் அவர்கள் நூல்கள் திறனாய்வு செய்வதில் வல்லவர் .குறிப்பாக ஹைக்கூ நூல்களை மிகச் சிறப்பாக திறனாய்வு செய்வார்கள் .அதனால்தான் அவருக்கு திறனாய்வுச்செம்மல் விருது வழங்கினார்கள் .கவிஞர் மன்னை பாசந்தியின் ஹைக்கூ நூல் திறனாய்வு போட்டி நடந்தது. அதில் முதல் பரிசு பெற்றார்கள் .எனக்கு ( கவிஞர் இரா .இரவி ) இரண்டாம் பரிசு கிடைத்தது .சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்கள் அனைத்திலும் கலந்து கொள்வார் .மலரும் நினைவுகளை மலர்வித்தது.அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் !

கருத்துகள்