கலங்கரை விளக்கம் ! கவிஞர் இரா .இரவி !
படிக்காத மீனவனின் வழிகாட்டி
திக்குத் தெரியாதவனின் திசைகாட்டி
கலங்கரை விளக்கம் !
ஒளியின் வழி
காட்டிடும் வழி
கலங்கரை விளக்கம் !
நினைவூட்டியது
பெற்றோரையும் ஆசிரியரையும்
கலங்கரை விளக்கம் !
கலங்கியவனுக்கு ஆறுதல்
குழம்பியவனுக்கு தெளிவு
கலங்கரை விளக்கம் !
சுற்றுலாப் பயணிகளையும்
சுண்டி இழுக்கும்
கலங்கரை விளக்கம் !
குழந்தைகளுக்கும்
குதூகலம் தரும்
கலங்கரை விளக்கம் !
ஆதவனுக்கு அடுத்து
ஓய்வின்றி உழைக்கும்
கலங்கரை விளக்கம் !
இருளை விரட்டும்
ஒளியை உமிழும்
கலங்கரை விளக்கம் !
உயரமாக இருந்தாலும்
ஒருபோதும் கர்வமில்லை
கலங்கரை விளக்கம் !
பலருக்கு உதவியபோதும்
நன்றி எதிர்பார்ப்பதில்லை
கலங்கரை விளக்கம் !
காட்டிடும் வழி
கலங்கரை விளக்கம் !
நினைவூட்டியது
பெற்றோரையும் ஆசிரியரையும்
கலங்கரை விளக்கம் !
கலங்கியவனுக்கு ஆறுதல்
குழம்பியவனுக்கு தெளிவு
கலங்கரை விளக்கம் !
சுற்றுலாப் பயணிகளையும்
சுண்டி இழுக்கும்
கலங்கரை விளக்கம் !
குழந்தைகளுக்கும்
குதூகலம் தரும்
கலங்கரை விளக்கம் !
ஆதவனுக்கு அடுத்து
ஓய்வின்றி உழைக்கும்
கலங்கரை விளக்கம் !
இருளை விரட்டும்
ஒளியை உமிழும்
கலங்கரை விளக்கம் !
உயரமாக இருந்தாலும்
ஒருபோதும் கர்வமில்லை
கலங்கரை விளக்கம் !
பலருக்கு உதவியபோதும்
நன்றி எதிர்பார்ப்பதில்லை
கலங்கரை விளக்கம் !
கருத்துகள்
கருத்துரையிடுக