மனிதரில் புனிதர் காமராசர் ! கவிஞர் இரா. இரவி !

மனிதரில் புனிதர் காமராசர் ! கவிஞர் இரா. இரவி !
*****
கல்விப் புரட்சிக்கு வித்திட்ட வீரர் காமராசர் !
கல்விக்கூடங்கள் பல திறந்திட்ட மாமனிதர் காமராசர் !

மட்டற்ற கல்வியோடு மதிய உணவும் தந்தவர் காமராசர் !
மாடுமேய்த்த சிறுவர்களை பள்ளிக்கு வரவழைத்தவர் காமராசர்!
தொழில்புரட்சியை தொடங்கி வைத்தவர் காமராசர் !
தொழிற்சாலைகள் பல சொல்லும் பெயர் காமராசர் !
ஆடம்பரம் என்னவென்று அறியாதவர் காமராசர் !
அன்பால் மக்கள் மனங்களில் வாழ்பவர் காமராசர் !
பலர் பட்டம், பதவி பெறக் காரணமானவர் காமராசர் !
பதவிக்கு என்றும் ஆசைப்படாத இனியவர் காமராசர் !
படிக்காதமேதை நினைவாக பல்கலைக்கழகம்பெயர் காமராசர் !
படிக்காத போதும் பட்டறிவு மிக்கவர் காமராசர் !
ஆகட்டும் பார்க்கலாம் என்று சொல்பவர் காமராசர் !
அப்படிச் சொன்னால் முடித்து விடுபவர் காமராசர் !
தொண்டனுக்கு செலவு வைக்க விரும்பாதவர் காமராசர் !
தொண்டர் வீட்டு திருமணம் திடீரெனச் சென்றவர் காமராசர் !
தென்னாட்டு காந்தியாக என்றும் திகழ்ந்தவர் காமராசர் !
வடநாட்டுப் பிரதமர்களை நியமனம் செய்தவர் காமராசர் !
பெரியாரின் கொள்கைகளைச் செயல்படுத்தியவர் காமராசர் !
பெரியாரால் பச்சைத்தமிழரெனப் பாராட்டப்பட்டவர் காமராசர் !
தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்தவர் காமராசர் !
தமிழகத்தை எல்லாத் துறையிலும் முன்னேற்றியவர் காமராசர் !
நேர்மையின் சின்னமாக விளங்கியவர் காமராசர் !
நாணயத்தின் சின்னம் மனிதரில் புனிதர் காமராசர் !

கருத்துகள்