உலகத் தமிழ் வழக்கறிஞர்கள் பேரவை மாநாடு !
கவிஞர் இரா .இரவி !
உலகத் தமிழ் வழக்கறிஞர்கள் பேரவை மாநாடு மதுரையில் உள்ள பத்திரிகையாளர்கள் சங்கத்தில் நடைபெற்றது
.5 வருட முகநூல் நண்பர் வழக்கறிஞர் கரூர் இரா .இராசேந்திரன் அவர்கள் மதுரை வரும்போதெல்லாம் சந்திக்க விரும்புவார் .பல்வேறு பணிகள் காரணமாக சந்திக்க இயலாமல் போனது .இன்று அலைபேசியில் அழைத்தார் .உலகத் தமிழ் வழக்கறிஞர்கள் பேரவை மாநாடு பற்றி தெரிவித்தார் .சென்று இருந்தேன் .இன்றுதான் நேரடியாக சந்தித்து மகிழ்ந்தோம் .திட்டமிட்டப்படி தொகுப்பு நூல் வெளியிடும் மருத்துவர் வே .தா .யோகநாதன் அவர்களுடன் பலமுறை அலைபேசியில் உரையாடி உள்ளேன் .தொகுப்பு நூல்களிலும் கவிதை எழுதி உள்ளேன் .அவரையும் நேரடியாக சந்தித்து மகிழ்ந்தேன் .
மதுரை உயர்நீதி மன்ற மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழாவில் சந்தித்த மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி பாரதியும் வந்து இருந்தார்கள் .வாழ்த்துரை வழங்கினார்கள் .மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் மா புனிததேவகுமார் ,தேமதுரத் தமிழோசை ஆசிரியர் தமிழாலயன் உள்ளிட்ட பலர் வருகை தந்து சிறப்பித்தனர் .
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பொறுப்பு முதல்வர் வாழ்த்துரை வழங்கினார் .என்னையும் பேச அழைத்தனர் .இன்ப அதிர்ச்சி .உயர்நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடும் மொழியாக நடைமுறையில் வர வேண்டிய அவசியம் பற்றி பேசி வந்தேன் .
கர்நாடகம் உள்ளிட்ட பல மாநில வழக்கறிஞர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்
கருத்துகள்
கருத்துரையிடுக