பொதிகை தொலைகாட்சியில் கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் விதமாக திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணி முதல் 11 மணி வரை


பொதிகை தொலைகாட்சியில்  கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் விதமாக திங்கள் முதல் வெள்ளி வரை  இரவு 10.30 மணி முதல் 11 மணி வரை முது முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் பேசி வருகிறார்கள் .பார்த்து மகிழுங்கள் .


பொதிகை தொலைகாட்சியில்  கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் விதமாக திங்கள் முதல் வெள்ளி வரை  இரவு 10.30 மணி முதல் 11 மணி வரை முது முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் பேசி வருகிறார்கள் .நேற்று இரவு கேட்டு மகிழ்ந்தேன் .எல்லாப் பணிகளும் முடிந்து ஓய்வான நேரம் என்பதால் கல்லூரி மாணவர்க கல் மட்டுமல்ல பலரும் பார்த்து வருகிறார்கள் .

78 வயதான முதுபெரும் எழுத்தாளர் இனிய நண்பர் திருச்சி சந்தர் அவர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார் .என்னை சந்திக்கும் போதெல்லாம் சொல்வார் . முது முனைவர் வெ .இறையன்பு
இ .ஆ .ப .அவர்கள் மிக நன்றாக பயனுள்ள கருத்துக்களை வழங்கி  வருகிறார் .நான் அவரது ரசிகர் ஆகி விட்டேன் .அவர் மதுரை வரும்போது அழைத்துச் செல்லுங்கள் நேரடியாக பாராட்ட வேண்டும் என்பார் .விரைவில் ஒரு நாள் அவர் ஆசையை நிறைவேற்ற  வேண்டும் .   

நேற்று பல தகவல்கள் சொன்னார்கள் நேர நிர்வாகம் ,மேலாண்மை ,சமயோசித புத்தி ,எறும்பின் புத்திக் கூர்மை இடையில் உள்ள பள்ளத்தில்  இரண்டு எறும்கள்  தன்னை இணைத்து பாலமாக்கி பிற எறும்புகளை செல்ல வைத்த  யுத்தி  ,ஒரு பேனாவை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் .சிறு கதை சொல்லி கேள்வி கேட்டு சரியான பதிலாக இருந்தாலும் குற்றப் புத்தி இருந்தால்  வேலை கிடைக்காது  .இப்படி பல தகவல்கள் வழங்கினார் .பாராட்டுக்கள் .
.
பொதிகை தொலைக்காட்சிக்கு ஒரு வேண்டுகோள் !
நேற்று இரவு அரை மணி நேர நிகழ்வில் 10 முறை தடங்கல் ஏற்பட்டது .தடங்கல் சில நிடங்கள் வரை தொடர்ந்தது. எரிச்சலாக  இருந்தது .பொறுமை இழக்க  நேரிட்டது .வேறு நிகழ்ச்சியாக இருந்தால் .மாற்றி விட்டு வேறு தொலைகாட்சி பார்த்து விடலாம். நல்ல நிகழ்ச்சி என்பதால் மாற்ற மனமில்லை .

இனி வரும் காலங்களில் இது போன்ற தடை வராமல் கவனமாக இருங்கள் .தனியார் தொலைக்காட்சிகளில் இப்படி தடைகள் தொடர்வது இல்லை .தொடர்ந்தால் வேலை போய் விடும் . அரசு தொலைக்காட்சி என்பதால் கவனக் குறைவு இருக்கக் கூடாது .இனி வரும் காலங்களில் மிக மிக கவனமாக தடங்கல் இன்றி ஒளிபரப்புங்கள் .  அரசின் மதிப்பு சார்ந்த விசயம் இது .

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்