அன்பான நண்பர்களுக்கு வணக்கம்


அன்பான நண்பர்களுக்கு 
வணக்கம்.  http://www.thamizham.net/thamizhamfm.htm,

தமிழம்.பண்பலை என்ற இணைய வானொலி தமிழ் மக்களுக்கான 
புதிய அணுகுமுறை. வெளிநாடுகளில் தமிழ்ச் சூழலை இழந்து வாழும் மக்களுக்கு
இந்தப் பாடல்கள் தங்களது தமிழ்ச் சூழலை மீட்டெடுத்துக்காட்டும். எனவே தான்
பல்வேறு நாடுகளில் வாழும் நம் தமிழ் நண்பர்கள். தமிழம்.பண்பலையை கேட்கத் 
தொடங்கினால் குறைந்தது 4 மணி நேரத்திற்கு மேல் கேட்கிறார்கள். 

தமிழம்.பண்பலையில் - திருக்குறள் முழுமையாகப் வெவ்வேறு வகையான இசைகளில்
இசைக்கப்படுகின்றன. பாவாணர், பெருஞ்சித்திரனார், குடந்தை சுந்தரேசனார், போன்ற
தமிழறிஞர்களின் உரையையும், கேட்கலாம். தமிழிலக்கியமான தொல்காப்பியம், 
திருவாசகம், தேவாரம், திருக்குறள், சித்தர்பாடல்கள், பாரதிதாசன், பாரதியார் பாடல்கள்
தற்கால தமிழியப் பாடல்கள், திரைஇசை வடிவில் தமிழியப் பாடல்கள் எனத் தமிழ்
மணக்கும் இசைத் தொகுப்பினை கேட்க உதவுகிற இணைய வழியிலான பண்பலை
இது. கேட்டுப் பாருங்கள். பிறகு கேட்டுக் கொண்டே இருப்பீர்கள். கேட்கக் கேட்க 
உங்களுக்குள் தமிழியம் மலரும். தமிழனாகத் தலை நிமிர்வீர்கள், தமிழ்ப் பண்பாடு
காட்சிதரும், உள்வாங்கி வழிநடக்க வாழ்வு செப்பமாகும். 

இது சரி என்றால் உங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்துங்கள். 
யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம். தமிழ் காட்டும் இசைப்பாடல்கள் உங்களிடம்
இருந்தால் அருள்கூர்ந்து அனுப்பி வைக்கவும். தன்புகழ்பாடாத, தமிழை முதன்மைப்
படுத்துகிற இசைப்பாடல்களை தமிழம்.பண்பலை அன்போடு வரவேற்கிறது, 

அன்புடன் 
பொள்ளாச்சி நசன், தமிழம்.வலை, தமிழம்,பண்பலை, 9788552061

pollachinasan@gmail.com, skype ID : pollachinasan1951 phone: (04259)221278

கருத்துகள்