இனிய நண்பர் அய்யா பொள்ளாச்சி நசன் அவர்கள் மின் அஞ்சல் வழி அனுப்பிய தகவல் ! கவிஞர் இரா .இரவி !


உலகின் முதல் மொழியான தமிழ் மொழி என்றென்றும் நிலைத்து இருக்கும்
வண்ணம் கணினியில் ஆவணப்படுத்தி வரும் இனிய  நண்பர் அய்யா பொள்ளாச்சி நசன் அவர்கள் மின் அஞ்சல் வழி அனுப்பிய தகவல் ! கவிஞர் இரா .இரவி !
.
நண்பர்கள் பலருக்கும் இன்று தொலைபேசி செய்தேன். 

இணையவழியிலாள நண்பர்களுக்கும் இந்தச் செய்தியை தெரிவிக்கவே இந்த இணைய பக்கத்தை எழுதுகிறேன். 

கடந்த ஒரு வாரமாக திரு. இல.சுந்தரம் அனுப்பிவைத்த ஒலி ஆவணங்களை வரிசைப்படுத்தினேன். நேற்று அவற்றை நமது தமிழம்.பண்பலையில் இணைத்தேன. இப்பொழுது கேட்கும் பொழுது தமிழம் பண்பலை மிகச் சிறப்பாக இருப்பதை உணர்ந்தேன். 

ஆர்வமுள்ள நண்பர்கள் தமிழம்.பண்பலையைக் கேட்பதோடு, விரும்புகிற நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும். நான் தொடர்பு கொண்ட தமிழறிஞர்கள் பலருக்கு இன்னும் இணையதளமே அறிமுகமில்லாமல் இருக்கிறது. மேலும் தான் எழுதிய நூல்களிலும், படைப்பாக்கங்களிலுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்குவதோடு அவற்றில் தமிழின் பதிவை ஆக்க வேண்டும் என்ற நிலையே அவர்கள் எண்ணுவதில்லை. 

தன் பெயரனுக்குத் எல்லாம் தெரியும் என்கிறார்கள், பெயரன்கள் தமிழுணர்வோடு இருப்பது அரியதாகவே இருக்கிறது. உலக வாழ்க்கையில் மேலெழுவதோடு நில்லாமல் தமிழிய உணர்வு நிலையிலும் மேலெழுந்தால்தான் நெஞ்சு நிமிர்ந்து வாழ இயலும் என்ற அடிப்படையைத் தமிழன் தான் கண்டறிந்து அறிமுகப்படுத்தினான். வேறு எந்த இலக்கியங்களிலும் இந்த உணர்வுப்பதிவு இல்லை. 

உடல், அறிவு, உள்ளம் என மேலெழ நாம் நிறைவோடு வாழ இயலும், நிறைவான வாழ்வியலுக்கான இந்த நுட்பம் தமிழியத்தில் தான் இருக்கிறது. இதனை நம் தமிழர்கள் அனைவரும் உள்வாங்க வேண்டும். தமிழம் பண்பலையைக் கேளுங்கள். இதற்கான படி அமைக்கும். இது உண்மை என்றால் நண்பர்களைத் தமிழம்.பண்பலை கேட்கத் தூண்டுங்கள். தமிழம்.பண்பலை தமிழர்களுக்கானது. நான் ஒரு கருவிதான். இதன் முழுத் தன்மையும் ஆளுமையோடு மேலெழுந்த தமிழர்களுடையது தான். 

அன்புடன் 
பொள்ளாச்சி நசன்,  தமிழம்.பண்பலை. தமிழம்,வலை  9788552061



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்