ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  ! சென்ரியு !      கவிஞர் இரா .இரவி !
ஏரிகளில்
ஏறி நின்றன
கட்டிடங்கள் ! 

ஏக்கத்துடன் பார்த்தான்
மழைக்கு ஒதுங்கியவன்
பள்ளியை !

வருவதில்லை
சொத்துச் சண்டை
ஏழை வீட்டில் !

சிறுவனுக்கு வண்டியானது
நோண்டிய பின்
நுங்கு !

கற்பித்தது தாய்மொழி
புலம் பெயர்ந்தோருக்கு
வானொலி !

குருதியோடு
உறுதியானது 
தாய்மொழி !

வெறுப்பதில்லை
வண்டுகளை
மலர்கள் !

மரத்தைப் பிரிந்ததால்  
சருகானது
இலை !    

கடிக்காது
மிதிக்காமல்
பாம்பு !

ஒளிக்கும்
தென்றலுக்கும்
ஒரே சன்னல் !

குட்டிப்போடவில்லை
வருடங்கள் ஆகியும்
மயிலிறகு !  நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்