ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

 ஹைக்கூ ! சென்ரியு !   கவிஞர் இரா .இரவி !
உடைந்தது பொம்மை
வலித்தது
குழந்தைக்கு !

என்றும்
இளமையாக
நிலா !

பறக்க மறந்தன
சிறகுகள் இருந்தும்
வாத்துக்கள் !

அறியவில்லை
கொக்கின் காத்திருப்பை
மீன்கள் !

சிதைத்தப் போதும்
கட்டத் தொடங்கியது
சிலந்தி !

தன் எதிர்காலம் அறியாமல்
கதவிடுக்கில் மரித்தது
பல்லி !

இல்லாத போதும்
வாழ்கின்றார் போதனையில்
புத்தர் !

மகன் கெட்டுப் போனாலும்
மற்றவரிடம் விட்டுத் தராத
அம்மா !

நேற்று தண்ணீர் இல்லை
இன்றும் மணலும் இல்லை
பெயரோ ஆறு ?

தரணியில் குறைத்தது
தமிழகத்தின் மதிப்பை
வாக்களிக்கப் பணம் !

இருக்கட்டும் பற்று
வேண்டாம் வெறி
நடிகர் மீது !

தரமாட்டான் அவ்வைக்கு
நெல்லிக்கனி
இன்றைய அதியமான் !

கருத்துகள்