உலகத் தமிழ் இலக்கியக் கலை விழா (2)

வணக்கம்!!!!!!!!!!!!
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் மலேசியா கோலாலம்பூர் இந்தியர் சங்கம் இணைந்து 22.08.2015 (சனி) அன்று மாலை 5.30 மணிக்கு தல்லாகுளம் இலட்சுமி சுந்தரம் அரங்கில் ‘உலகத் தமிழ் இலக்கியக் கலை விழா (2)’ எனும் நிகழ்வினை நடத்த உள்ளது. இக்கலை விழாவில் மலேசியாவைச் சார்ந்த 37 நாடகக் கலைஞர்களால் ‘மாவீரன் இராசேந்திர சோழன்’ வரலாற்று நாடகம் நடத்தப்பட உள்ளது. தமிழ்வளர்ச்சி (ம) செய்தித்துறை அரசு செயலாளர் அவர்களும் மதுரை மாவட்ட ஆட்சியரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ள இந்நிகழ்ச்சியில் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். மாபெரும் வீரரான இராசேந்திர சோழனின் வரலாற்றினை அறிய உதவும் இந்நாடகத்திற்கு அனுமதி இலவசம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 

தனி அலுவலர்,
உலகத் தமிழ்ச்சங்கம் மதுரை.

கருத்துகள்