நல்ல மனிதர்களுக்கு மரணம் இல்லை உண்மை ! கவிஞர் இரா .இரவி

நல்ல மனிதர்களுக்கு மரணம் இல்லை உண்மை ! கவிஞர் இரா .இரவி

இறந்தால் ஊர் அழ வேண்டும் என்றாய் நீ
இறந்தாய் உலகமே அழுதது உனக்காக !

குடும்பத்தில் ஒருவர் இருந்து விட்டது போல்
குவலயமே கண்ணீர் வடித்தது உனக்காக !

எங்கு பாரத்தாலும் உந்தன் உருவப்  படங்கள்
எங்கு கேட்டாலும் உன்னைப் பற்றிய பேச்சு !

கைரேகையில் எதிர்காலம்  பார்த்து காலம் கழிக்காதே
கைகளற்றவர்களுக்கும் எதிர்காலம் உண்டு என்றாய் !

சோதிடம் பார்த்து சோர்ந்து போகாதே
சுறுசுறுப்பாய் வாழ்க என்று அறிவுறுத்தினாய் !

வறுமையில் வளர்ந்திட்ட போதும் என்றும்
வசதிகளுக்கு ஆசைப்படாத புத்தன் நீ !

தூக்குத் தண்டனையை என்றும் விரும்பியதில்லை
தூக்குத் தண்டனை நீக்கிடக் குரல் தந்தாய் நீ !

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்
என்று இலக்கணம் வகுத்துச் சென்றாய் !

தலைக்கனம் என்றுமே வந்ததில்லை உமக்கு
தலைமையில் இருந்தபோதும்  எளிமையில் நீ


மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் என்று
மனிதர்களை மதித்து நடந்து காட்டினாய் நீ !

மதங்களை விட மனிதமே பெரிது என்று
மதவாதிகளுக்கு புரிய வைத்தாய் நீ !

குடும்பத்தினரைக் கூட குடியரசுத்தலைவர் மாளிகையில்
கூட வைத்துக் கொள்ளாதவன் புனிதன்  நீ !

கர்மவீரர் காமராசர் போலவே மணமுடிக்காமல்
கடமையாற்றி மக்களுக்காக வாழ்ந்தவன் நீ !

நல்ல மனிதர்களுக்கு மரணம் இல்லை உண்மை
நாடு மதிக்கும் உனக்கும் மரணம் இல்லை !



கருத்துகள்