இன்றைய சிந்தனை..
..........................................
கோபத்தைத் தவிர்ப்போம்..
........................................................
புத்தர்
மீது வெறுப்புக் கொண்ட ஒருவன் அவரைப் பார்த்தபோது அவர் முகத்தில்
உமிழ்ந்து விட்டான்.அதைத் துடைத்துக் கொண்டே புத்தர் அமைதியாகக் கேட்டார்
,''வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா அப்பா?''
புத்தரின்
உறவினரும் அவர் உடனேயே இருந்த சீடருமான ஆனந்தருக்குக் கோபம் வந்து
விட்டது.''நீங்கள் அனுமதி கொடுத்தால் அவனுக்கு நான் பதிலடி
கொடுக்கிறேன்,''என்றார்.
புத்தர்
அவரிடம் சொன்னார்,''ஆனந்தா,நாம் எல்லாம் சந்நியாசிகள் என்பதை மறந்து
விட்டாயா? இதோ, இவரைப்பார் ,ஏற்கனவே, ,இவர் கோபம் என்னும் நோயினால்
பீடிக்கப் பட்டிருக்கிறார்.
அவருடைய
கோபமான முகத்தைப்பார்.அவர் உடல் ஆடுகிறது.கோபப்படும் முன் அவர் மகிழ்வுடன்
நடனம் ஆடிக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறாயா?
அவர் தன கோபத்தினால் பைத்தியமாக நிற்கிறார்.இதைக் காட்டிலும் கொடிய தண்டனை வேறு யார் அவருக்குக் கொடுக்க முடியும்?
எனக்கு
என்ன பெரிய கெடுதல் நேர்ந்து விட்டது.இதைத் துடைப்பதைத் தவிர எனக்கு என்ன
சிரமம் உள்ளது?நீ கோபப்படாதே.இல்லையெனில் அவருக்கு நேர்ந்த சிரமங்கள்
எல்லாம் உனக்கும் நேரும்.
உன்னை நீயே ஏன் தண்டித்துக் கொள்ள வேண்டும்?
இவர் மீது கோபப்படாதே.மாறாக இரக்கப்படு.
'' பின்னர் புத்தர் தன் மீது உமிழ்ந்தவரைப் பார்த்து,
''அப்பா,நீ
மிகவும் களைப்புடன் காணப் படுகிறாய்.உன்னை நீயே தண்டித்துக் கொண்டது
போதும்.என்னிடம் நீ நடந்து கொண்டதை மறந்துவிடு.வீட்டிற்குப் போய்
ஓய்வெடு,என்றார்.
அவன் மிகுந்த அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாதவனாக நின்றான்.பின் அவன் புத்தரிடம் மன்னிப்புக் கேட்டான்.
புத்தர் சொன்னார்,
''முதலாவதாக நான் கோபப்படவில்லை.பின் மன்னிக்க வேண்டும் என்ற கேள்வியே எழாதே? ஆனால் இப்போது உன்னைப் பார்க்கையில் எனக்கு மகிழ்ச்சி.
ஏனெனில்
நீ உன் துன்ப நிலையிலிருந்து மீண்டு நிம்மதியுடன் காணப்படுகிறாய்.மீண்டும்
இத்தவறை யாரிடமும் செய்து உனக்குள் நீயே நரகத்தை உருவாக்கிக்
கொள்ளாதே.''என்றார்.
ஆம்,நண்பர்களே.,
நம்முடைய கோபம் அத்துமீறிப் போகும்போது நம் உடல்நிலை, மனோநிலை இரண்டுமே பாதிக்கப்படுகின்றன.
நாம் யார்மீது கோபம் கொள்கிறோமோ அவர்களும்
இன்னல் அடைகின்றார்கள்..
எனவே,
கோபத்தைத் தவிர்ப்போம்.
நற்பண்புகளுடன் வாழ்வோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக