சென்றியு ! துளிப்பா ! கவிஞர் இரா .இரவி !



சென்றியு ! துளிப்பா ! கவிஞர் இரா .இரவி !

வேண்டும் உறுதி
முடியும் என்று நம்பு
முடியும் உன்னால் !

உன்னை நீ
உயர்வாக எண்ணினால்
உறுதி உயர்வு !

மிகவும் முக்கியம்
நம்மை நாம்
காதலிப்பது !

பிறரை நேசி
அதற்கு முன்
உன்னை நேசி !

தோல்வியின்
முதல்படி
தாழ்வு மனப்பான்மை !

வேண்டாம் வேண்டா   வெறுப்பு
வேண்டும்   விருப்பு
பணி !

வல்லவனை விடச்
சிறந்தவன்
நல்லவன் !


உடல் பலத்திலும்
உயர்ந்தது
உள்ளத்தின் பலம் !

வருமெனக் காத்திருக்காதே
தேடிச் செல் கிட்டும்
வாய்ப்பு !

சோகத்தை
மறக்க வழி
உழைப்பு !

விரும்பாதவர்
உலகில் எவருமில்லை
பாராட்டு !

அருகே முட்கள்
ஆனாலும் மகிழ்வாக
ரோசா !

செயலுக்கு முன்
அவசியத் தேவை
சிந்தனை !

படிப்பதை விட
படைப்பதே சிறப்பு
வரலாறு !

உண்மையில் இல்லை
கற்பிக்கப்பட்ட கற்பனை
அதிர்ட்டம் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்