குதிரை ! கவிஞர் இரா .இரவி !
கொம்புகள் இல்லை !
யாரையும் முட்டுவதில்லை !
கொடிய கோரப் பற்கள் இல்லை !
யாரையும் கடிப்பதில்லை !
பிறரைத் தாக்குவதில்
ஆற்றலை வீணாக்காமல் !
தன் முன்னேற்றத்திற்கு மட்டுமே
ஆற்றலை செலவழிக்கும் !
ஆற்றல் விரயம் இல்லை !
முன்னோக்கிய பயணம்
மட்டுமே !
இயந்திரத்தின் அளவையும்
குதிரையின் ஆற்றல்
அளவால் சொன்னார்கள் !
குதிரையும் நமக்கு
கற்பிக்கும் பாடம் !
உண்ணவில்லை அசைவம் !
உண்பது சைவம் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.blogspot.in/
.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கருத்துகள்
கருத்துரையிடுக