பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு .
கேள்வி ! கவிஞர் இரா .இரவி !
குழந்தைகள் கேட்டால்
கோபம் வேண்டாம்
அறிவாளியாவதன் அறிகுறி !
இந்த உலகம்
உருவானது
கேள்விகளால் !
எடிசனின் கேள்விகள்
தந்தன
எண்ணற்ற கண்டுபிடிப்புகள் !
தந்தை பெரியாரின்
கேள்விகள் மலர்வித்தது
பகுத்தறிவை !
எழுப்பியதால்தான்
மக்கள் அறிந்தனர்
சட்டமன்றத்தில் கேள்வி !
ஏன் ? எதற்கு ? எப்படி ?
எதனால் ? கேள்விகள்
அறிவின் தொடக்கம் !
புரட்சிகள் தொடங்கியது
நல்வர்களின்
கேள்விகளால் !
கேட்கக் கூடாது எனும்போது
ஆரம்பமாகுது
சர்வாதிகாரம் !
கோபம் வரும்
கேள்வியில் உள்ளது
நியாயம் !
தேடலின் தொடக்கம்
தேவைகள் தீர்க்கும்
கேள்வி !
கேட்டால்தான் கிடைக்கும்
விடையும் தீர்வும்
கேள்வி !
விஞ்ஞானிகளின் கேள்விகளால்
விளைந்தது
நவீனம் !
வளைந்து இருக்கும் கேள்விக்குறி
விடை வந்தால்
ஆச்சரியக்குறி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக