ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

அறிந்திடுக 
மேகி மட்டுமல்ல    
எல்லா  நூடுல்சும்  தீங்கு !

பீசா போய்
தோசை வந்தது டும் டும்  
நன்றி காக்கா முட்டை !

நீக்கியது 
துருவை 
குளிர்பானம் ?

நீர் ஆகாரம் 
அருந்துகையில்
இல்லை நோய்கள் !

என்றும் நன்று 
வாங்கி  அருந்துக 
இளநீர் ! 

உணவுகளில் கவனம் 
செயற்கை வண்ணம் 
வரவழைக்கும் புற்றுநோய் !

தந்தது பலருக்கு 
துரிதசாவு 
துரித  உணவு !

செமிக்காமல் வயிற்றில் 
புரட்டியது 
புரோட்டா !
நெகிழி 
ஈடில்லை   
வாழை இலைக்கு !

ஆங்கிலேயன் கற்பித்த 
ஆகப் பெரிய தீங்கு 
மது !

கருத்துகள்