ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
வாழ்வாங்கு வாழ்கிறார்
வளமான பாடல்களில்
கவியரசர் !
முற்பாதி பகுத்தறிவு
பிற்பாதி ஆன்மிகம்
இரண்டும் அறிந்தவர் !
பாடாத பொருள் இல்லை
பொருளின்றிப் பாடவில்லை
கவியரசர் !
முன்னேற்ற விதையானது
முத்தான பாடல்கள்
முத்தையாவின் சொத்தானது !
வானம் அழாவிடில்
மனிதன் அழ நேரிடும்
வறட்சி !
இயற்கையின்
கஞ்சத்தனம்
வறட்சி !
இன்னல் ஏழைகளுக்கு
பாதிப்பில்லை பணக்காரர்களுக்கு
வறட்சி !
மழைநீர் சேகரிப்பு
தொய்வின்றித் தொடர்ந்தால்
வாய்ப்பில்லை வறட்சி !
வான் பொய்த்தால்
வாழ்க்கை பொய்க்கும்
வறட்சி !
ஆதவனின்
அடங்காத சினம்
வறட்சி !
கவலையைப் போக்கும்
நோயை நீக்கும்
இசை !
அறிவியல் உண்மை
வளர்கின்றன பயிர்கள்
இசை !
கருத்துகள்
கருத்துரையிடுக