ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு ! நகைச்சுவை ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு !
நகைச்சுவை  ! கவிஞர் இரா .இரவி !

வியாபாரி குல்லாவை 
எறிந்தும் எரியவில்லை 
நவீன குரங்குகள் !   

காகம் பாடியது 
கா கா என்று 
வடையை காலில் வைத்து !

எட்டவில்லை என்றதும் 
புளிக்கும் எனவில்லை 
பழுக்கட்டும் என்றது நரி !

கிடைக்கவில்லை இந்த மருந்து 
என் கையெழுத்து என்றார் 
மருத்துவர் !
  
பானையில் கற்கள் போடவில்லை 
உறிஞ்சியது குழல் வைத்து 
கணினியுகத்தின்   காகம் !

கிணற்றில் முகம் பார்த்து 
குதிக்கவில்லை விரட்டியது நரியை 
புத்தி மிக்க சிங்கம் !

கீழே குதித்தவன் 
விழுந்தான் பல்லி மீது 
பல்லி ?

எல்லோருக்கும் எதிர்காலம் 
சொல்லியும்  அறியவில்லை
அதன் எதிர்காலம் கிளி  !

மறந்துவிட்டது 
சிறைகள் இருப்பதை 
சோதிடக் கிளி !

சாப்பிட வந்தவர் மூளை இருக்கா ?
எல்லோருக்கும் இருந்தது 
உங்களுக்குத்தான் இல்லை !

சாப்பிட்டவர் சொன்னார் 
சுவையான முருங்கைக்காய் 
காதிலிருந்து தவறிய பென்சில் !

வெளிநாடு செல்வதில் போட்டி 
வெல்வது நீயா ? நானா ?
பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்