ஹைக்கூ ! ( துளிப்பா ) கவிஞர் இரா .இரவி!

ஹைக்கூ ! ( துளிப்பா ) கவிஞர் இரா .இரவி!

பொன்னை விட மேலானது
போனால் வராது
நேரம் !

தவறு செய்து விட்டு
பெயர் சூட்டுகின்றனர்
தலைவிதி !

கேட்டு வாங்குவது இழுக்கு
தானாக வருவது பெருமை
மரியாதை !

முன்னேற்றத்தின்
தடைக்கல்
பொறாமை !

அன்பின் பகைவன்
அறிவைச் சிதைப்பவன்
வெறுப்புணர்ச்சி !

அடையாளம்
பெரிய மனிதர்களுக்கு
அடக்கம் !

கற்றலின்
கேட்டல் நன்று
அறிஞர்கள் உரை !

சினம் வரும் நேரம்
வேண்டும் கவனம்
சிறந்தது மவுனம் !

அச்சம் அகற்றி
துணிவு தரும்
மனத்தூய்மை !

நிரந்தரமன்று
வஞ்சகரின்
வெற்றி !

இலக்கணம்
மனிதனுக்கு
உழைப்பு !

வேலை இல்லை
வீண் சண்டைக்கு
நா காக்க !

நேசிப்பு இருந்தால்
சலிப்பு வராது
பணியில் !

பாதியாக்கும்
கவலையை
ஆறுதல் !




கருத்துகள்