துளிப்பா ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !
ஆசையே அழிவு என்றவன்
அரண்மனை துறந்து வந்தான்
புத்தன் !
அறியலாம் மெய் பொய்
ஆர்ப்பரிக்கும் பொய்
அடக்கமாக மெய் !
உண்மை இல்லை
தேய்வதும் வளர்வதும்
நிலவு !
இல்லை
கிழக்கும் மேற்கும்
சூரியனுக்கு !
நோயை உரைப்பார்
நாடி பிடித்தே
நாட்டு வைத்தியர் !
உணர்க
உயிர் உருக்கும் திரவம்
குளிர்பானம் !
உரைத்தார் அன்றே
உணவில் சிறந்தது சைவம்
ஒப்பற்ற வள்ளுவர் !
உயிர்கள் வணங்கும்
உணவில் சைவமானால்
உரைத்தார் வள்ளுவர் !
கொண்டாட்டம்
மணல் கொள்ளையருக்கு
ஆறு பாலையானது !
ரசித்துப் படித்தால்
ருசிக்கும் புத்தகம்
வாழ்க்கை !
ஆசையே அழிவு என்றவன்
அரண்மனை துறந்து வந்தான்
புத்தன் !
அறியலாம் மெய் பொய்
ஆர்ப்பரிக்கும் பொய்
அடக்கமாக மெய் !
உண்மை இல்லை
தேய்வதும் வளர்வதும்
நிலவு !
இல்லை
கிழக்கும் மேற்கும்
சூரியனுக்கு !
நோயை உரைப்பார்
நாடி பிடித்தே
நாட்டு வைத்தியர் !
உணர்க
உயிர் உருக்கும் திரவம்
குளிர்பானம் !
உரைத்தார் அன்றே
உணவில் சிறந்தது சைவம்
ஒப்பற்ற வள்ளுவர் !
உயிர்கள் வணங்கும்
உணவில் சைவமானால்
உரைத்தார் வள்ளுவர் !
கொண்டாட்டம்
மணல் கொள்ளையருக்கு
ஆறு பாலையானது !
ரசித்துப் படித்தால்
ருசிக்கும் புத்தகம்
வாழ்க்கை !
கருத்துகள்
கருத்துரையிடுக