பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி !
மண் குதிரையை நம்பி
ஆற்றில் இறங்கலாம்
ஆற்றிலும் மண்தான் !
வைக்க முடியாது
தேங்காய்
குருவி தலையில் !
செந்தமிழும் நாப்பழக்கம்
தமிங்கிலம் பரவுதலும்
நாப்பழக்கம் !
மருமகள் உடைத்தால்
பொன்குடம் தவறு
பொன்குடம் உடையுமா ?
ஆயிரம் காக்கைக்கு மட்டுமல்ல
ஆயிரம் புறாவிற்கும்
ஒரு கல் போதும் !
கற்றது கையளவு
கல்லாதது உலகளவு
தோல்வியுற்ற மாணவன் !
குளித்து விட்டு வந்தான்
காணவில்லை
கூழ் !
தெரிந்து விடும்
நாய் வேசமிட்டு
குரைத்தாலும் !
நார் உரிப்பார்கள்
கல்லிலும்
அரசியல்வாதிகள் !
கரும்பு கசக்கும்
வேம்பு இனிக்கும்
பழுது நாக்கில் !
காண்பது எளிது
பிறர் குற்றம்
நம் குற்றம் ?
அறிந்திடுக
ஆரோக்கியம் இல்லை
ஆடம்பர உணவில் !
எதிர்மறையாகப் புரிந்தனர்
போதனையை மக்கள்
காந்தியடிகளின் குரங்குகள் !
தண்ணீரில் பயணித்தாலும்
தரையிலும் இருப்பதுண்டு
ஓடம் !
உயர்ந்திட உதவினாலும்
உயரம் செல்வதில்லை
ஏணி !
இறைக்கும் கிணறுதான்
ஊரும் சரி
எங்கே கிணறு ?
புலிகள் இல்லாத காட்டில்
இராசாதான்
ஆடும் !
நிழல் நிஜமாகாது
நிஜம் இன்றி
இல்லை நிழல் !
பரணி தரணி ஆளுமாம்
தரணியில் பிறந்தவன்
எடுக்கிறான் பிச்சை !
கணவனை இழந்ததும் இழக்க வேண்டுமா ?
குழந்தையிலிருந்து சூடிய மலரை
பெண்கள் !
.
குற்றமுள்ள நெஞ்சு
குறுகுறுக்கவில்லை
அரசியல்வாதி !
கசந்தாலும்
பிணி நீக்கும்
கசாயம் !
தலைக்கு வந்தது
தலைப்பாகையோடு போக
வேண்டும் தலைக்கவசம் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
குழந்தையிலிருந்து சூடிய மலரை
பெண்கள் !
.
குற்றமுள்ள நெஞ்சு
குறுகுறுக்கவில்லை
அரசியல்வாதி !
கசந்தாலும்
பிணி நீக்கும்
கசாயம் !
தலைக்கு வந்தது
தலைப்பாகையோடு போக
வேண்டும் தலைக்கவசம் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.blogspot.
.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கருத்துகள்
கருத்துரையிடுக