கட்டாயமாகட்டும் கண்தானம் ! கவிஞர் இரா .இரவி !


கட்டாயமாகட்டும்   கண்தானம் ! கவிஞர் இரா .இரவி !
.

மனிதன் இறந்ததும் எரிக்கிறீர்கள் அல்லது
மதவழக்கப்படி மண்ணில் புதைக்கிறீர்கள்
தீயுக்கும் மண்ணுக்கும் இரையாகும் விழிகளை
தயவுசெய்து மனிதர்களுக்கு வழங்குங்கள்.
தானத்தில் சிறந்த்து விழிகள் தானம்
தரணி போற்றிடும் தானம் விழிகள் தானம்
இறந்த பின்னும் இயற்கையை ரசிக்க
இனிய ஆசை உள்ளவர்கள் வழங்குங்கள்
தானத்தில் மிக எளிதானது கண் தானம்
தானம் எழுதித் தந்து விட்டு
இறந்தவுடன் உறவினர் தகவல் தந்தால்
உடன் வந்து எடுத்துச் செல்வார்கள்
கருமணியை மட்டுமே எடுப்பார்கள்
காண்பதற்கு எடுத்
தே தெரியாது
முழிகள் இல்லை என்றால் சொர்க்கம் இல்லை
மூட நம்பிக்கைகளை முற்றாக ஒழியுங்கள்
சொர்க்கத்தில் இடமில்லை என்பது மூடநம்பிக்கை
சொர்க்கம், நரகம் என்பதே மூடநம்பிக்கை
நீங்கள் வழங்கிடும் இருவிழிகள்
நல்லவர்கள் நால்வருக்கு பார்வையாகும்
பார்வையை இழந்து விட்டு பலர்
பார்வைக்காக விழிகள் வேண்டி உள்ளனர்
பார்வையற்றோர் இன்னலை யோசித்துப் பாருங்கள்
பார்வை கிடைத்தால் பரவசம் அடைவார்கள்
ஒரு வேளை உணவு வீணானால் வருந்துகிறோம்
ஒப்பற்ற விழிகள் வீணாவதை உணர்ந்திடுவோம்
எல்லோரும் கண்தானம் செய்திடுங்கள் 
எல்லோரும் கண்பார்வை பெற்றிடட்டும்
கண்வங்கியில் சேமித்து வைப்பார்கள்
கண் தேவையின் போது வழங்கிடுவார்கள்
கண்களுக்காக காத்திருப்போர் எண்ணற்றோர்
கனிவோடு வழங்கினால் பார்வை கிடைக்கும்
வீணாக விரயமாகும் விழிகளை வழங்குவது
விவேகமான செயல் என்பதை உணருங்கள்.
மனிதாபிமானம் மனிதர்களுக்கு வேண்டும்
மக்கிப் போகும் விழிகள் மனிதர்களுக்கு வேண்டும்
வாழும் போது விழி தானம் பதிவு செய்யுங்கள்
வாழ்க்கை முடிந்த்தும் உறவினர் தகவல் தாருங்கள்
சில நிமிடங்களில் கருவிழிகள் எடுத்து விடுவார்கள்
சிதைக்கு தீ வைக்கும் முன் கருவிழிகளை
த் தாருங்கள்
வாழும் போதும் வாழ்க்கைக்குப் பின்னும்
விழிகள் வாழ வழங்கிடுக விழிகள் தானம்
கண்ணாமூச்சு விளையாடும் போது
கால் தவறி கீழே விழுவோம் நாம்
பார்வையற்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும்
கண்ணாமூச்சு விளையாட்டு வாடிக்கையானது!
கண்களை மூடிவிட்டு சில நிமிடம் நடங்கள்
கண்களி
ன் பயனை உணர்வோம் நாம்!
முகநூலில் முகத்தை இறந்த பின்னும் காண
முக்கியம் கண்தானம் செய்திடுங்கள்
மின் அஞ்சலில் இறந்த பின்னும்
மின் மடல்கள்  கண்டு மகிழலாம்
உலகின் அழகை இறந்தபின்னும் ரசித்திட
உடனே கண்தானம் செய்திடுங்கள்
உயிரோடு இருக்கையில் உதவாவிடினும்
உயிர் போன பின்பாவது உதவிடுங்கள்
நால்வரின் வாழ்வில் இன்ப ஒளி ஏற்றிடுங்கள்
நன்மைகள் கிடைத்திட காரணமாகிடுங்கள்
வீணாக்கலாமா? விழிகளை யோசியுங்கள்
விவேகமாக்ச் சிந்தித்து முடிவெடுங்கள்
பகுத்தறிவாளர்கள் பலர் கண்தானம் செய்துள்ளனர்
பகுத்து அறிந்து கண்தானம் செய்திடுங்கள்
ஏன்? எதற்கு? எதனால்? என்று கேட்பது பகுத்தறிவு
ஏன்? எதற்கு? எதனால்? விழிகள் வீணாக வேண்டும்
சிந்திக்க மறுப்பது மனிதனுக்கு அழகன்று
சிந்தித்துச் செயல்படுவது மனிதனுக்கு அழகாகும்
அவசியமின்றி அக்னிக்குத் தரும் விழிகளை
அவசியமுள்ள மனிதர்களுக்கு வழங்குங்கள்
மண்ணிற்கு மக்கிட வழங்கும் விழிகளை
மனிதர்களுக்க்கு மனிதாபிமானத்துடன் வழங்குங்கள்
அன்னதானம் சிறந்த்து என்பார்கள்
அனைத்திலும் சிறந்த தானம் கண்தானம் என்பேன்
பிறந்தோம் இறந்தோம் என்ற வாழ்க்கை வேண்டாம்
பிறந்தோம் வழங்கினோம் என்றாக வேண்டும்
பிறந்ததன் பயனே பிறருக்கு உதவுவது
பிறருக்குப் பார்வை கிடைக்க
க் காரணமாவோம்.
கண்தானம் பற்றிய விழிப்புணர்வு வேண்டும்
கண்தானம் என்பது கட்டாயமாகிட வேண்டும்
அகவிழி விடுதியின் பார்வையற்ற பழனியப்பன்
ஆண்டுதோறும் நட்த்துகின்றார் கண்தான முகாம்
பார்வையற்றவருக்கு விழிகள் மீதுள்ள விழிப்புணர்வு
பார்வை உள்ளவர்களுக்கு இருப்பதில்லை ஏன்?
இறப்பில் ஒரு சதவீதம் நபர்கள் கூட
இன்னும் கண்தானம் தருவதில்லை
பகுத்தறிவைப் பயன்படுத்தத் தயக்கம் ஏன்?
பயன்படுத்தினால் கண்தானம் சாத்தியமே!
தயக்கம் வேண்டாம் தாராளமாக வழங்குங்கள்
தவிக்கும் சகோதரர்களுக்கு மனமுவந்து உதவுங்கள்
என்னுடைய விழிகளை பிறந்தநாள் அன்று
எழுதிக் கொடுத்து விட்டேன் நான்
இறந்த பின்னும் எந்தன் கவிதைகளை
இந்தக் கவிதையையும் வாசிக்கும் வாய்ப்புண்டு
தயக்கம் இன்றித் தந்திடுங்கள் விழிகளை
தகர்த்திடுங்கள் முட்டாள்தனமான மூடநம்பிக்கைகளை
ஆண்டு ஒன்றுக்குத் தேவை ஒரு லட்சம் விழிகள் !
ஆனால் கிடைப்பதோ  முப்பதாயிரம் மட்டுமே !

இருட்டில் வாழும் இன்னலில் வாடும் !
இனியவர்களுக்கு பார்வை ஒளி தருவோம் !

இறந்ததும் ஆறு மணி நேரத்திற்குள் விழிகள் !
எடுத்தால் நல்லது பார்வைக்குப் பயன்படும் !

நோய் உள்ளவர்களும் தரலாம் கண்தானம் !
உயிர்கொல்லி நோய்உள்ளோர் தர வேண்டாம் !

கண் தானம் யாவரும் தந்து மகிழ்வோம் !
கடைசிவரை உலகைக் கண்டு மகிழ்வோம் !

கண் உள்ள அனைவருமே இனி நாட்டில் !
கண் தானம் செய்திட முன் வர வேண்டும் !
.
இனி ஒரு விதி செய்வோம் நாம் !
எல்லோரும் கண் தானம் செய்வோம் !

இனி விழிகள் எடுக்காத பிணங்களுக்கு !
இடுகாட்டில் அனுமதி இல்லை அறிவிப்போம் !

இனி விழிகள் எடுக்காத பிணங்களுக்கு !
என்றும் சுடுகாட்டில் அனுமதி இல்லை அறிவிப்போம் !

இறந்தவுடன் சொந்தகளுக்குச் சொல்லும்  முன் !
எழுதி வைத்த மருத்துமனைக்குச் சொல்வோம் !

இழவு  வீட்டில் துக்கம் விசாரிக்கும் முன் !
இவரது விழிகள் எடுதாச்சா என்று கேட்ப்போம் !

இறுதிச் சடங்குகள் செய்யும்   முன்பாக !
இனிய விழிகள் எடுக்க வைப்போம் !
வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அவசியம் நன்று
வாழ்ந்து முடித்தவர்களுக்கு கண்தானம் அவசியம் 
மயிலே மயிலே என்றால் இறகு தராது
மயிலைப் பிடித்து இறகு பறிப்பது போல
கண்தானம் தாருங்கள் என்றால் பலர் தருவதில்லை
கண்தானம் கட்டாயமாக்கி சட்டம் இயற்றுவோம்
அவசியம் அனைவரும் கண்தானம் தரவேண்டும்
அரசு சட்டம் இயற்றினாலும் தவறில்லை

நன்றி


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்