தோற்றாலும் எழுவோம் ! கவிஞர் இரா .இரவி !

தோற்றாலும் எழுவோம் ! கவிஞர் இரா .இரவி !

தோல்விக்குத் துவண்டு விடும் சராசரியல்ல 
தோல்விக்குப்  பின்னும்  முயன்று வெல்வோம் !

ஆயிரம் முறை முயன்று வென்றிட்ட 
அற்புத எடிசன் வரலாறு அறிந்தவர்கள் நாங்கள் !

பதினேழு முறை முயன்று வென்றிட்ட 
பண்டைய கசினிமுகமது கதை படித்தவர்கள் நாங்கள் !

ஒரே ஒரு முறை முயன்று தோற்றதும் 
ஓடி விடும்  கோழைகள் அல்ல நாங்கள் !

வீரத்தை இந்த உலகிற்கு கற்பிதா ஆசான் 
வீரத்தின் அடையாளமாக விளங்குபவர் நாங்கள் !

இந்தமுறை தோற்றாலும் அடுத்தமுறை வெல்வோம் !
எல்லாமுறையும்  தோறபோமென எண்ணாதீர் !

வெற்றி என்பது யாருக்கும் நிரந்தரமன்று 
வெற்றி என்பது எதிரிக்கும் நிரந்தரமன்று  !

வெற்றி மாலை நாளை எங்கள் தோள்களில் 
வீரவசனம் பேசுவதை நிறுத்திடுக இனிய எதிரிகளே !

தோல்வி என்ற படிக்கட்டில் ஏறி விட்டோம் 
வெற்றி எல்லையை அடைந்தே தீருவோம் !

வெற்றி வசமாகும் நாள் தூரத்தில் இல்லை 
வெற்றிக்கு வழி வகுத்தால் தோல்வி   இல்லை !

கருத்துகள்