நெடுஞ்சாலைத் துறையின் கவனத்திற்கு !

நெடுஞ்சாலைத்  துறையின் கவனத்திற்கு !

மதுரையில் இருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் வழியில் சாலையின்   இரண்டு புறமும் உள்ள  100 க்கும் மேற்பட்ட மரங்களின்  மீது ஆணிகள் அடித்து  தங்க மாம்பழம் பாலிடெக்னிக் கல்லூரியின் விளம்பரத்தை வைத்துள்ளனர் .யாரிடம் இதற்கு அனுமதி பெற்றார்கள் .மரங்களின் மீது ஆணிகள்  அடிப்பது தடை செய்யப்பட வேண்டும் .இந்த விளம்பரம் படிக்கும் போது தங்க மாம்பழம் பாலிடெனிக் கல்லூரியின் மீது பார்ப்பவர்கள்   அனைவருக்கும் கோபமும் எரிச்சலும்  வருகிறது .இந்த விளம்பரங்களை   நீக்கி விடுவது நல்லது .நெடுஞ்சாலைத்  துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் .

கருத்துகள்