இரண்டாம் பட்சமாக நினைத்தே வளர்க்கின்றனர்
முதல்பட்சமாக மகளே ஆகின்றாள் !
முதல்பட்சமாக மகளே ஆகின்றாள் !
வேண்டாவெறுப்பாக சிலர் வளர்ப்பதுண்டு
விவேகத்தில் சிறந்தவளாக அவள் ஆவதுண்டு !
கொள்ளி போட மகனில்லையே வருத்தத்தில்
கனிவின்றி மகளை சிலர் வளர்ப்பதுண்டு !
கனிவின்றி மகளை சிலர் வளர்ப்பதுண்டு !
மின்சாரத் தகனம் இங்கே வந்தபின்னே
மகன் கொள்ளி போட வேண்டிய அவசியமில்லை !
மகன் கொள்ளி போட வேண்டிய அவசியமில்லை !
மகள் கொள்ளி வைத்தாலும் வேகும் பிணம் !
மயானத்தில் அனுமதிப்பதில்லை மாற வேண்டும் இந்நிலை !
மயானத்தில் அனுமதிப்பதில்லை மாற வேண்டும் இந்நிலை !
ஆண் வாரிசு என்று செல்லத்தால் வளர்த்த மகன்
அவமானத்தை சிலருக்கு தந்து விடுவதும் உண்டு !
அவமானத்தை சிலருக்கு தந்து விடுவதும் உண்டு !
பெண்மகள் பாசத்தில் அன்பில் சிறந்தவள்
ஆண்மகன் பாசத்தில் அன்பில் குறைந்தவன் !
ஆண்மகன் பாசத்தில் அன்பில் குறைந்தவன் !
திருமணமாகி கணவன் வீடு சென்ற பின்னும்
தன் மனத்தைப் பெற்றோர் மீது வைத்திருப்பவள் மகள் !
தன் மனத்தைப் பெற்றோர் மீது வைத்திருப்பவள் மகள் !
திருமணமாகி விட்ட மகனோ மெல்ல மெல்ல
தன் பெற்றோரை மறக்கும் அவலமும் நடப்பதுண்டு !
தன் பெற்றோரை மறக்கும் அவலமும் நடப்பதுண்டு !
மணமான பெண்ணிடம் அவளைத் திட்டினாள் பொறுப்பாள்
மங்கையின் பெற்றோரைத் திட்டினால் பொங்கி எழுவாள் !
மங்கையின் பெற்றோரைத் திட்டினால் பொங்கி எழுவாள் !
மணமான ஆணிடம், அவன் பெற்றோரைத் திட்டினால்
மனம் கோணாமல் அவனும் சேர்ந்து திட்டுவதுண்டு !
மனம் கோணாமல் அவனும் சேர்ந்து திட்டுவதுண்டு !
எங்கேயும் எப்போதும் யாரிடமும் பெற்றோரை
என்றும் விட்டுக் கொடுக்காதவள் மகள் !
என்றும் விட்டுக் கொடுக்காதவள் மகள் !
தன் மூச்சு உள்ளவரை தன் பெற்றோரை நேசிக்கும்
தீவிர பாசக்காரி நேசக்காரி மகள் !
தீவிர பாசக்காரி நேசக்காரி மகள் !
பெண் பிறந்ததற்காக இனி யாரும் பேதலிக்க வேண்டும்
பெண் பிறந்தால் பெருமை கொள்ளுங்கள் !
பெண் பிறந்தால் பெருமை கொள்ளுங்கள் !
பெண் பெற்றதற்காக பெற்றவளை வெறுக்கும்
பாசமற்ற தந்தைகள் உடன் திருந்த வேண்டும் !
பாசமற்ற தந்தைகள் உடன் திருந்த வேண்டும் !
ஆணா? பெண்ணா? முடிவு செய்வது பெண்ணல்ல
ஆணிடம் உள்ளது என்று அறிவியல் சொல்கிறது !
ஆணிடம் உள்ளது என்று அறிவியல் சொல்கிறது !
மகளைப் பெற்றவர்கள் பாக்கியவான்கள் உணருங்கள்
மகளுக்காக என்றும் எப்போதும் வருந்தாதீர்கள் !
மகளுக்காக என்றும் எப்போதும் வருந்தாதீர்கள் !
மகளைப் பெற்றதற்காக பெருமை கொள்ளுங்கள் !
மாண்பு மிக்கவள் மண்ணில் மகத்தானவள் மகள் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக