ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
வாழ்கிறார்
நம்மாழ்வார்
இயற்கை விவசாயத்தில் !
நம்மாழ்வார்
இயற்கை விவசாயத்தில் !
நவீன விவசாயம்
பூச்சிக்கொல்லி மருந்து
மனிதக்கொல்லியானது !
பூச்சிக்கொல்லி மருந்து
மனிதக்கொல்லியானது !
செயற்கை உரம்
பயிர் வளர்த்தது
உயிர் குறைத்து !
பயிர் வளர்த்தது
உயிர் குறைத்து !
நலம் பயக்கும்
மண்ணுக்கும் மனிதனுக்கும்
இயற்கை உரம் !
மண்ணுக்கும் மனிதனுக்கும்
இயற்கை உரம் !
வழக்கொழிந்தது
தீப்பெட்டி
உலகமயம் !
தீப்பெட்டி
உலகமயம் !
பயன்பாட்டை மட்டுமல்ல
பண்பாட்டையும் மாற்றியது
உலகமயம் !
நம் நாட்டவருக்கு திருவோடு
அயல் நாட்டவருக்கு தங்கவீடு
தாராளமயம் !
அயல் நாட்டவருக்கு தங்கவீடு
தாராளமயம் !
விவசாயி தற்கொலை
தொழிலாளி பசிக்கொலை
புதிய பொருளாதாரம் !
தொழிலாளி பசிக்கொலை
புதிய பொருளாதாரம் !
ஒழிப்பதாகச் சொன்னவார்கள்
ஓடி விட்டனர்
வறுமை !
ஓடி விட்டனர்
வறுமை !
அரசியல்வாதிகளின்
கொடுமையையும் மிஞ்சியது
கோடையின் வெப்பம் !
கொடுமையையும் மிஞ்சியது
கோடையின் வெப்பம் !
வேற்றுமையில்லை
ஒற்றுமையே
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி !
ஒற்றுமையே
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி !
படிக்கும்போது
முடித்ததும் வேலை என்பர்
முடித்ததும் மறப்பர் !
முடித்ததும் வேலை என்பர்
முடித்ததும் மறப்பர் !
பெருகிறார்கள் மருத்துவர்கள்
பெருகிறார்கள் பொறியாளர்கள்
குறைகிறார்கள் மனிதர்கள் !
பெருகிறார்கள் பொறியாளர்கள்
குறைகிறார்கள் மனிதர்கள் !
எட்டுச் சுரைக்காய்
கறிக்கு உதவாது
இன்றைய கல்வி !
கறிக்கு உதவாது
இன்றைய கல்வி !
கருத்துகள்
கருத்துரையிடுக