தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கவனத்திற்கு !

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கவனத்திற்கு !

31.5.2015 இன்று திருவில்லிபுத்தூரில் இருந்து கிருஷ்ணன் கோயில் வழியாக மதுரை வந்த  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை பேருந்தில் வந்தேன் .வண்டி எண் TN 67.  NO 714 பயணச் சீட்டு எண் 11633.பேருந்து மிக மிக மோசமான நிலையில் இருந்தது .நின்று பயணிப்பவர்கள் பிடிக்கும் கம்பி தனியாக கையோடு வருகிறது பயணிகள் மீது கம்பி குத்தி விடும் அபாயம் உள்ளது .இருக்கைகள தனியாக ஆடுகின்றன .பேருந்தின் ஜன்னல் பகுதி தனியாக ஆடுகிறது மிகவும் மோசமான பேருந்துகளை  ஒழித்து விட்டு நல்ல பேருந்துகளை பயன்படுத்த வேண்டுகிறேன் .இது குறித்து நடத்துனரிடமும் கேட்டேன் .அவரும் எழுதி கொடுப்பதாக உறுதி சொன்னார் .  தனியார் பேருந்துகள்  மிகவும் வசதியாக இருக்கும் போது அரசு போக்குவரத்துக்,கழகப் பேருந்து இவ்வளவு மோசமாக இருந்தால் பயணிகள் ஏற யோசிப்பார்கள் .

கருத்துகள்