அப்பா ! கவிஞர் இரா .இரவி !

அப்பா !  கவிஞர் இரா .இரவி !

திடிரென ஒரு நாள் அப்பா  காணாமல் போனார் !
திக்குத் தெரியாத காட்டில் விட்டது போலானேன் !

காவல் நிலையம் சென்று புகார் தந்தேன் !
காவலரோடு சென்று தம்பியும் நானும் தேடினோம் !

கடவுள் நம்பிக்கை இல்லாத நான் இராமேஸ்வரம் 
கோயில் பழனி கோயில் என்று சென்று தேடினேன் !

முதியோர் விடுதிகள் தோறும் தேடினோம் !
மதுரை  விடுதிகள் அனைத்திலும் தேடினோம் !

அரசு ராசாசி மருத்துவமனையிலிருந்து அழைப்பார்கள் !
அங்குள்ள பிணவறைக்கு பலமுறை சென்று பார்த்தேன் !

நடமாடும் நடைப்பிணமாக நடந்து வந்தேன் !
நிம்மதியை முழுவதும் இழந்து தவித்தேன் !

நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு வழக்குத் தொடுத்தேன் !
நடந்தது வழக்கு விடியவில்லை எந்தன் கிழக்கு !

குடும்பமே சோகத்தில் ஆழ்ந்து வருந்தினர் !
கூடிய நடப்பும் உறவும் சேர்ந்து தேடினோம் !

சொத்தை உன் பெயருக்கு எழுதி வாங்கவில்லையா ?
சொந்தங்கள் சிலர்  என்னை எள்ளல் செய்தனர் !

பிரிந்திருந்த ஒரு வருடம் ஒரு யுகமானது !
பிரியம் அப்பா மீது மிக மிக அதிகமானது !  

கவலையில் சோர்ந்து உடைந்த போது !
கவலையில்லாதோர் யாருமில்லை உலகில் !

உடைந்து விடாதே ஒரு நாள் உங்கள் தந்தை !
உங்களிடம் வருவார் என்றார் இறையன்பு அவர்கள்  !

ஓராண்டு  முடிந்து இனிதே அப்பா இல்லம் வந்தார் !
ஒவ்வொருவரும் அடைந்த இன்பம் அளவில்லை !

கடத்தப்பட்டு விடுதியில் சிறை வைத்திட்ட உண்மை !
கண்டபின்பு சொன்னதும் தான் சோகக்கதை தெரிந்தது !

சந்தித்த வினாடிகளில் அடைந்த இன்பத்தை !
சாதரணமாக வார்த்தைகளில் வடிக்க முடியாது !

உடன் இருக்கும்போது உணராத அன்பை !
உணர்த்தியது பிரிவின் போது அப்பா அன்பு !

கருத்துகள்