முகமூடி ! கவிஞர் இரா .இரவி !

முகமூடி !   கவிஞர் இரா .இரவி !  




இயல்பாய் இருங்கள்  வசப்படும்
வேண்டாம் 
முகமூடி ! 

உள் ஒன்று வைத்து 
புறம் ஒன்று பேச வைக்கும் 
முகமூடி ! 

சுயத்தையும் சுயமரியாதையும் 
இழக்க வைக்கும் 
முகமூடி ! 

அணியாமல் இருந்தால் 
அழகாக இருக்கும் 
முகமூடி !

கழண்டு விழுந்தால் 
சுயம் தெரியும் 
முகமூடி ! 

நிரந்தரமன்று 
தற்காலிகமே
முகமூடி ! 

அவசியம் தேவைப்படுகிறது 
அரசியலில் 
முகமூடி !

புலித்தோல் அணிந்த 
பசுவும் தெரிந்துவிடும் 
முகமூடி !

பசுத்தோல் போர்த்திய 
புலியும் தெரிந்துவிடும் 
முகமூடி !

நல்லவனாக நடித்தாலும் 
நடிப்பை உணர்த்திவிடும் 
முகமூடி !

நல்லவனுக்கு 
தேவையில்லை நடிப்பு 
முகமூடி !

புறம் மூடினாலும்
அகம் முட முடியாது    
முகமூடி !

திருடர்களுக்குத் துணையென்றாலும்   
பிடிபட்டதும் கிழியும் 
முகமூடி !

ரசிப்பார்கள் குழந்தைகள் 
ரசிப்பதில்லை பெரியவர்கள் 
முகமூடி !

கொள்ளையர்கள் ஆயுதம் 
கொள்கையாளர்கள் அணிவதில்லை 
முகமூடி !

அணிந்தே பழகி 
மறைந்தது சொந்தமுகம் 
முகமூடி !

அணியலாம்  கூத்துக்கு 
அணியாதே கொள்ளைக்கு
முகமூடி !

பச்சோந்தியையும் 
வென்றது 
முகமூடி !

உள்ளத்தில் ஒன்று 
உதட்டில் மற்றொன்று 
முகமூடி !

நடிகர்களை  விஞ்சிடும் 
நடிப்பை நல்குகின்றனர் 
முகமூடி !

தெரியாதென நினைத்தாலும் 
தெரிந்துவிடும் நடிப்பு 
முகமூடி !

 


.

கருத்துகள்