ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

பிறந்தது எங்கோ ?
இணைந்தன இங்கே !
மலர்கள் !

பிரிந்து இருந்தவைகளை 
இணைத்தது நார்
மலர்கள் !

பயணம் எங்கோ
கோவிலுக்கா ? மயானத்திற்கா ?
மாலை !

யாருக்கோ ?
மணமக்களுக்கா ? மரணித்தவர்களுக்கா ?
மாலை !
ஆடாதே மனிதா 
ஆடி உணர்த்தியது 
மாலை !படங்கள் யாவும் என் அலைபேசி வழி நான் எடுத்தவை   !

கருத்துகள்