வாழ்க பல்லாண்டு ! கவிஞர் இரா .இரவி

வாழ்க பல்லாண்டு !  கவிஞர் இரா .இரவி

இயற்கையின் காட்சி 
இனிய மனதிற்குள் ஆட்சி !

மலையை முத்தமிடத் 
துடிக்கும் மேகங்கள் !

கம்பீரமான மலைகள் 
காட்சிக்கு இனிமை !

ஒய்யாரமாகத்   தோன்றும் 
ஓங்கி வளர்ந்த  மரங்கள் !

ஓய்வு எடுக்க அழகிய 
ஓட்டு  வீடு !

வண்ண மலர்கள்  பூத்து இருக்கும் 
வனப்பு மிகு தோட்டம் !

இருப்பை உணர்த்தும் 
இலைகள் இனிமை !

தூரிகையால் ஓவியம் வடித்த 
ஓவியன் வாழ்க பல்லாண்டு !
.

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்