.
ஹைக்கூ ! சென்ட்ரியு ! கவிஞர் இரா .இரவி !
தந்தை கணவன்
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
ஹைக்கூ ! சென்ட்ரியு ! கவிஞர் இரா .இரவி !
தீமை நினைக்காத
தியாக உள்ளம்
அன்னை !
காணிக்கை கேட்காத
கடவுள்
அம்மா !
வசமான வாய்ப்பின்
பெயரோ
அதிர்ஷ்டம் !
அமரருக்கு மட்டுமல்ல
வாழ்பவருக்கும் தேவை
அடக்கம் !
அன்று அதிகாரத்தால்
இன்று அன்பால்
அலுவலக இயக்கம் !
அஞ்சுவான்
தன் நிழல் கண்டும்
கோழை !
கற்பிக்கப்பட்ட
கற்பனை
தலை விதி !
பெயர் இணைப்பு
ஆணாதிக்க அங்கீகாரம் !
முன்னேற்றத்தின்
பகைவன்
ஒய்வு !
நல வழி காட்டும்
தீய வழி தடுக்கும்
மனசாட்சி !
உடலுக்குத்தான்
எண்ணத்திற்கு என்றுமில்லை
முதுமை !
சாவதற்கு யோசிக்கும்
நேரத்தில்
வாழ வழி தேடு !
ஒரே ஒரு முறைதான்
இன்னொரு முறை இல்லை
வாழ்வாங்கு வாழு !
வா வாழ் வாகை
மூன்றும் அடக்கம்
வாழ்க்கை !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக