ஹைக்கூ ! சென்ட்ரியு ! கவிஞர் இரா .இரவி !
மலருக்கு வலியின்றி
உண்டது தேன்
வண்டு !
உண்டது தேன்
வண்டு !
உண்ண முடியாத
வெள்ளை அப்பம்
முழு நிலவு !
வெள்ளை அப்பம்
முழு நிலவு !
அறிகின்றன விலங்குகள்
அறியவில்லை மனிதன்
இயற்கையின் சீற்றம் !
அறியவில்லை மனிதன்
இயற்கையின் சீற்றம் !
பண்படுத்தப் படைத்தவை
புண் படுத்தப் பயன்படுகின்றன
மதங்கள் !
புண் படுத்தப் பயன்படுகின்றன
மதங்கள் !
நன்றியோடு வணங்கின
பூமியை
நெற்க்கதிர்கள் !
பூமியை
நெற்க்கதிர்கள் !
நேரத்தை மட்டுமல்ல
தன்னையும் வீணாக்குகின்றான்
சோம்பேறி !
தன்னையும் வீணாக்குகின்றான்
சோம்பேறி !
அறிவாளியையும்
முட்டாளாக்கும்
பணம் !
முட்டாளாக்கும்
பணம் !
நல்லவனையும்
நய வஞ்சகனாக்கும்
கொடிய பணம் !
நய வஞ்சகனாக்கும்
கொடிய பணம் !
கொடுத்தால் குறையாமல்
வளரும் விந்தை
கல்வி !
வளரும் விந்தை
கல்வி !
உருவம் இல்லாதது
உருப்புகளை விட மேலானது
கல்வி !
உருப்புகளை விட மேலானது
கல்வி !
முகத்தின் புன்னகை
அழகாக்கும்
அகத்தை !
அழகாக்கும்
அகத்தை !
உதவுகின்றன
உண்ணுவதற்கு
விரல்களின் கூட்டணி !
உண்ணுவதற்கு
விரல்களின் கூட்டணி !
செய்த உதவியை
சொல்லிக் காட்டுவது
அறம் அன்று !
சொல்லிக் காட்டுவது
அறம் அன்று !
இறுதிக்குப் பின்னும்
தொடர்வது உறவுகள் அன்று
செய்த தொண்டு !
தொடர்வது உறவுகள் அன்று
செய்த தொண்டு !
முடியும் என்று முயன்றவன்
முத்தமிடுகிறான்
வெற்றியை !
முத்தமிடுகிறான்
வெற்றியை !
கருத்துகள்
கருத்துரையிடுக