இனியாவது திருத்திடு மனிதா ! கவிஞர் இரா .இரவி !

இனியாவது திருத்திடு மனிதா ! கவிஞர் இரா .இரவி !


இயற்கையை நீ சிதைக்கச் சிதைக்க
இயற்கை உன்னைச் சிதைக்கும் !
ஆற்று மணலை தினமும்
அளவின்றி கொள்ளையடிப்பதை நிறுத்து !
மலைகளை வெடி வைத்து தகர்த்து
மலை போல பணம் குவிப்பதை நிறுத்து !
நிலத்தடி நீரை மின் கருவிகள் முலம் உறிஞ்சி
நிர்மூலம் ஆக்குவதை நிறுத்து !
பொறுமையின் சின்னமான
பூமியின் பொறுமையை சோதிப்பதை நிறுத்து !
பூகம்பம் வந்தால் நீ தாங்க மாட்டாய்
பூமியை இயற்கையை மதித்து நட !
இனியாவது திருத்திடு மனிதா !
இனியாவது இயற்கையை நேசிக்கப் பழகு !

கருத்துகள்