நச் வரிகள் ! கவிஞர் இரா .இரவி !
அடிப்படைத் தேவைகள்
பூர்த்தியாகாமல்
ஏவுகணைகள் ஏவி என்ன பயன் ?
தலையில் இடுப்பில் மட்டுமல்ல
வாரிசின் வசமும்
தண்ணீர்க்குடம் !
கண்டுபிடித்தவருக்கு
நன்றி
நெகிழி ( பிளாஸ்டிக் ) குடம் !
சுமையை சுமையாக
எண்ணாத
சுமங்கலி !
வருத்தமின்றி
பாரம் சுமக்கும்
குடும்பம் !
குடங்கள்
சுமந்த போதும்
மாறாத புன்னகை !
வான் மழை பொய்த்தது
வந்தது
தண்ணீர் பற்றாக்குறை !
காணவில்லை
வானத்தை வில்லாய்
வளைப்போம் என்றவர்களை !
வாக்குக் கேட்டு இனி
வரட்டும்
வாய்ச்சொல் வீரர்கள் !
தேனும் பாலும்
ஓடுமென்றனர்
தண்ணீர் கூட வரவில்லை !
கருத்துகள்
கருத்துரையிடுக