புற்று நோய் மருத்துவம் மற்றும் குழந்தையின்மை மருத்துவம் புகழ் குரு மருத்துவமனையில் அகமகிழ் மன்றம் தொடக்க விழாபடங்கள் . இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ. கார்த்திகேயன் கை வண்ணத்தில்
நன்றி!செய்தி.காவல்துறை உதவி ஆணையர்
ஆ .மணிவண்ணன் அவர்களின் முக நூலில் இருந்து .
தென் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த இராஜாஜி மருத்துவமனை,மீனாட்சி மிஷன், அப்போலோ மற்றும் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுடன் பல்வேறு சிறப்பு மருத்துவமனைகள் உள்ளன.
அதில் புதிதாக அனைத்து வசதிகளுடன் புற்றுநோய் , குழந்தையின்மை மற்றும் அனைத்துப் பிரிவுகளுடன் மதுரையில் புகழ்பெற்ற பாண்டி கோவிலருகே 4/120 F, பாண்டிக் கோவில் சுற்றுச் சாலையில் மூன்று ஆண்டுகளாக குரு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது.
மதுரை T.கல்லுப்படடிப் பகுதியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வுப் பெற்று தெய்வமானத் தன் தந்தையின் பெயரில் மதுரையின் புகழ்பெற்ற புற்று நோய் மருத்துவர் திரு பாலமுருகன் தன் துணைவியார் குழந்தையின்மை போக்கும் சிறப்பு மருத்துவத்தின் மருத்துவர் கல்பனாவுடன் துவக்கிய மருத்துவமனை.
ஓரு சிறப்பு மருத்தவமனைக்கான அனைத்து கூறுகளுடன் அமையப் பெற்றுள்ளது.
மதுரை மாநகரின் முக்கியமான மாட்டுத் தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வானூர்தி நிலையமருகில் முக்கியச் சாலையில் அமைந்துள்ளது.
இருவரும் மருத்துவர் என்பதால் அவர்களது மருத்துவ நண்பர் குழாமின் ஒத்துழைப்போடு இயங்குகின்றது.
ஆசிரியரின் மகன் என்பதால் இயற்கையாகவே மனித நேயமிக்கவராகவும் பூர்வீக மூத்த தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதனால் தமிழறிஞர்களுடன் நிறைந்த பழக்கமென்பதால் தன் மருத்துவமனையை வெறும் சிகிச்சை மையமாக வைத்திருக்க எண்ணாமல் எளிய மக்களுக்குத் தமிழ் வழியாக நகைச்சுவை, மருத்துவ விழிப்புணர்வு வளர்க்க இன்று "அகமகிழ் மன்றம்" ஒன்றினை மாதந்தோறும் தனது மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் நடத்த எனது முன்னிலையில் இன்று 14.04.15 ஆம் தேதி முற்பகல் நடைபெற்றத் தவக்க விழாவில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை முதல்வர் மரு. ரேவதி தலைமையில் விழுப்புரம் மருத்துவக் கல்லூரியின் மேனாள் முதல்வர் மரு.அம்பிகை மீனா வாழ்த்துரை வழங்க இன்று துவக்கினார்.
நிகழ்ச்சியில் மதுரை கவிஞர் கண்ணதாசன்,வழக்கறிஞர் குகசீலரூபன் கவிதை வாசித்தும் கவிஞர்கள் இரா.இரவி,மூரா, பேரையூர் முருகன் ,வாசியோகி இளங்கோ சவாமிகள் மற்றும் சிவர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியின் நிரந்தர நடத்துநராக அறிவிக்கப்பட்டுள்ள பட்டிமன்ற நடுவர் பெருந்தகை மைத்துனர் திரு சண்முகத்திருக்குமரன், நகைச்சுவை பேச்சாளர் புலவர் வைத்தியலிங்கம் தொகுத்து வழங்கினர்.
நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த குரு மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் அய்யா கலாமின் பக்தர் கலாம் சுப்ரமணியன் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுப் பெற்றது.
மேலும் இந்த மன்றத்தின் துவக்கவிழா நினைவாக என்னுடைய அன்பு வேண்டுகோளுக்கிணங்க ஐந்து மரங்கள் மருத்துவமனையின் முன்புற அழகுத் தோட்டத்தில் நடப்பட்டது கூடுதல் செய்தி.
.
கருத்துகள்
கருத்துரையிடுக