லீ குவான் யூ! கவிஞர் இரா. இரவி

லீ குவான் யூ!

கவிஞர் இரா. இரவி
முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய நல்லவர்
புதுமாதிரியாக சிங்கப்பூரை வடிவமைத்துக் காட்டியவர்

சிங்கப்பூர் என்றால் லீ குவான் யூ என்று பொருள்
லீ குவான் யூ என்றால் சிங்கப்பூர் என்று பொருள்

சுந்தரமான சிங்கப்பூராய் உலக சுற்றுலாத்தலமாக்கியவரே!
சுற்றிப்பார்க்க மக்கள் விரும்பும்  நாடாக்கியவரே!

சிங்கப்பூர் என்ற சிலையை வடிவமைத்த சிற்பியே !
சிலையைக் கண்டு உலகமே வியந்து பார்க்கின்றது!

தோன்றின் புகழோடு தோன்றுக என்ற திருக்குறளுக்கு
தரணியில் எடுத்துக்காட்டாக வாழ்ந்திட்ட வல்லவரே!

முயன்றால் முடியாதது உலகில் எதுவுமில்லை
முயற்சி திருவினையாக்கும் என உலகிற்கு உணர்த்தியவரே!

சிங்கார சிங்கப்பூரின் முதல் பிரதமரானவரே!
சிங்கப்பூரை சிங்காரித்ததில் முதன்மையானவரே!

சுத்தம் என்பதை உலகிற்கே கற்பித்தவரே!
அசுத்தம் செய்தால் அபராதமென்று போதித்தவரே!

உலக வரைபடத்தில் சிறு புள்ளிதான் சிங்கப்பூர்!
உலக அரங்கில் பெரும்புள்ளியானது சிங்கப்பூர்!

உலகின் முதல் மொழியான தமிழ் ஆட்சிமொழிகளில்  ஒன்று!
உங்களால்தான் தமிழ்மொழி பன்னாட்டு மொழியானது நன்று!

உழைப்பின் உயர்வை மக்களுக்கு உணர்த்தியவரே!
உழைப்பால் மக்கள் மனங்களில் என்றும் வாழ்பவரே!

புருஷ் லீ யால் லீ என்ற எழுத்து உலகப்புகழ் பெற்றது!
புனிதர் உங்களால் லீ அடுத்து உலகப்புகழ் பெற்றது!

எலியை புலியாக்கும் வித்தை கற்றவரே
புலிக்கும் சாந்தம் கற்பிக்கும் கலை அறிந்தவரே!

நாட்டின் தலைவர் எப்படி இருக்க வேண்டுமென்று
நாடுகள் யாவிற்கும் உழைப்பால் உணர்த்தியவரே!

இவர் போல யாரு ? என்று உலகம் சொல்லுது !
இவர் போல மாறு ! என்று உதடுகள் சொல்லுது !

ஈடு செய்ய இயலாத இழப்பு என்பது உண்மை!
ஈடு இணையற்ற உழைப்பை நல்கியது உண்மை!

ஈழத் தமிழர்களின் பால் பாசம் கொண்டவரே !
இதயத்தில் ஈரம் என்றும் உள்ள நல்லவரே !

ராசபட்சேயின் ரவுடித்தனம் சாடியவரே !     
ராட்சசனின் சிங்கள் இன வெறியை வெறுத்தவரே !

இரவு பகல் பாராமல் சிங்கப்பூருக்காக உழைத்தவரே !
இறந்த பின்னும் மறக்க மாட்டார்கள் உங்களையே !

துறைமுகமாக இருந்த சிங்கப்பூரை நாட்டை 
தொழில் முகமாக மாற்றிய  மாண்பாளரே !

சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படுபவரே!
சிங்கப்பூரில் 91 ஆண்டுகள் சிறப்பாக வாழ்ந்தவரே!

உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும்
உழைப்பால் உலக மக்கள் உள்ளங்களில் வாழ்கிறார்.

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்