காதல் ! கவிஞர் இரா .இரவி !

காதல் !          கவிஞர் இரா .இரவி !

கற்காலம் தொடங்கி  கணினி காலம்  வரை
காலம் தோறும் தொடரும் விந்தை  காதல் !

அம்பிகாவதி அமராவதி தொடங்கி
அனுசுகா காலம் வரை தொடர்கின்றது !

பார்த்ததும் வருவதல்ல காதல் !
பார்க்ப் பார்க்க வரும் காதல் !

புறம் பார்த்து வருவதல்ல காதல் !
அகம் பார்த்து வருவதே காதல் !

இரும்பைக் கவரும் காந்தமென
இரு விழிகள் கவருகின்றன !

விழிகள் விழியே  சென்று
விசித்திரம் புரிகின்றன உள்ளே !

தனியாகப் பேசிட வைக்கும்
பிருந்தால் தவிக்க வைக்கும் !

மூன்று எழுத்து முத்தாப்பு !
முகத்தில் உண்டாக்கும் பளபளப்பு !

அறிந்தவர்கள் போற்றி மகிழ்கிறார்கள் !
அறியாதவர்கள் தூற்றி  மகிழ்கிறார்கள் !

மண்ணில் பிறந்ததன் பயனே
மனதில் காதல் பிறப்பதுதான் !

முத்தம் முன்னுரையாகின்றது !
இன்பம் முடிவுரையாகிகின்றது !

எதிர்ப்பு என்பது என்றும் உண்டு !
துளிர்ப்பு என்பது என்றும் உண்டு !.

மனம் செம்மையாகும் குணம் சீராகும் !
தீய பழக்கங்கள் தூர விலகும்   !

கண் அசைத்தால் போதும் காரியங்கள் முடியும் !
கை கூடி விட்டால் ஊட்டச்சத்து இலவயம் !

கோபம் காணமல் போகும் !
வயபட்டுவிட்டால் போதும் !

சிறகுகள் இன்றியே வானில் பறக்கலாம் !
வானம் வசப்படும் வசந்தம் வசமாகும் !

கனவுகள் கணக்கின்றி வந்து போகும் !
கவிதைகள் குற்றால அருவியாக கொட்டும் !

முடியாதவை முடித்திட உதவும் !
தெரியாதவை தெரிந்திட உதவும் !

அறியாதவை அறிந்திட உதவும் !
அனைத்தும் இன்பமயமாகும் !

சொல்லில் அடங்காத உணர்வு !
சுகம் இதம் தரும் நினைவு !

என்று நினைத்தாலும் இனிக்கும்   !
நின்று நினைவில் இதம் தரும் !

--

.

கருத்துகள்