ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !   சென்றியு !  கவிஞர் இரா .இரவி !

பஞ்ச பூதங்களும் 
பயப்படும் பூதம் 
மனிதன் !

பள்ளம் நிரப்பி 
சமமாக்கியது 
நடந்த நதி !

தோகை இல்லை 
ஆனாலும் அழகு 
பெண் மயில் !

என்றாவது ஒரு நாள் 
இருவரும் வானில் 
சந்திரன் சூரியன் 

பறிக்கப்பட்டு
தொடுக்கப்பட்டப்   பின்னும் 
சிரிக்கும்   மலர்கள் !

நீக்குக அகராதியிலிருந்தும்
அகத்திலிருந்தும்
போர் எனும் சொல் !

வேண்டாம் நாளை 
இன்றே முடி 
நல்ல செயல் !

உடைதான் அழுக்கு
உள்ளம் வெள்ளை 
நாற்று நாடும் பெண்கள் !

ஆதியில் இல்லை 
பாதியில் வந்த தொல்லை 
சாதி !

எங்கு தேடியும் 
கிடைக்கவில்லை 
கடவுள் !
 
கடித்த  எறும்பை நசுக்கி 
பழிக்குப் பழி வாங்கினான் 
மனிதன் !

கூட்டணி வைத்து 
இரை இழுத்தன   
எறும்புகள் !

பச்சை இழந்ததும் 
பெயர் இழந்தது 
இலை சருகானது !

கொடுத்தாலும் குறையாதது 
கல்வி மட்டுமல்ல 
அன்பும்தான் !

அழகோ அழகு 
திருஷ்டி பட்டது       
திருஷ்டி பொம்மைக்கு !

கருத்துகள்