இல்லங்களில் குழந்தைகளுக்கு தமிழ் பேசச் செய்யுங்கள் - கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

இல்லங்களில் குழந்தைகளுக்கு தமிழ் பேசச் செய்யுங்கள் - கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன்
வேண்டுகோள்- தமிழ்த்தாத்தா அவர்களின் 160-ஆம் பிறந்தநாள் விழாவினில் ஏர்வாடியார்
சொற்பொழிவு.


அண்மையில் தான் தாய்மொழி நாளும் உலகம் முழுதும் கொண்டாடப்பட்டது.நம் தாய்மொழி இந்தியாவின் முதற் செம்மொழி என பார்லிமெண்ட் அறிவிக்கதமிழ்த்தாத்தாவின் 
தொண்டை நினைவுகூர்ந்து, நம் வருங்கால சந்ததிகளுக்குதமிழை எடுத்துச் செல்வோம். அதற்கான
ஆக்கச்செயல்களை ஆற்றுவோம்.
நா. கணேசன்
உவேசா பிறந்தநாள் கவிதைகள் - வெண்பாவிரும்பி (சந்தவசந்தத்தில்)இன்று (19.2.2015) 
ஐயரவர்களின் 160-ஆம் பிறந்த தினம்.

நன்றி.
********************
(எழுசீர் விருத்தம்)

முந்தையர்க் கெழுவார்க் கற்பனைக் குருவா
...முகிழ்த்தபல் விரைமலர் குலுங்குஞ்
செந்தமிழ்க் காவில் உலவியப் பூக்கள்
...திரவியம் என்றுணர்ந் தெடுத்துத்
தந்தநற் சாமி நாதனாம் புலவன்
...சரஸ்வதி எனுமனை மகவாய்
வந்தவிச் சிறப்புத் தினத்தவன் நினைவெம்
...மனத்திடை நிறுத்துவ மன்னோ.

ஆர்=அழகு; கா=சோலை
**********
(அறுசீர் விருத்தம்)

சுந்தர வேடம் பூண்ட சுப்பிர மணிய தேவன்
தந்தையின் அன்பு காட்டித் தாங்கிய தென்றும் எண்ணிப்
புந்தியின் வழியாப் பின்னப் புரவலற் கீடு செய்த
அந்தணன் சாமி நாதன் அவனியை அடைந்த தின்றே.
**********
(நேரிசை வெண்பா)

சொல்வலவன் மீனாட்சி சுந்தரன் பாலமர்ந்து
கல்வி பயின்றக் கவிப்பெருங்கோன் - நல்லுளமே
வாதரத்தின் மூழ்கி அகத்தார் வுறச்சாமி
நாதனுல கெய்தியதிந் நாள்.

அமர்ந்து=உட்கார்ந்து, விரும்பி; ஆதரம்=அன்பு; அகம்=மனம்; ஆர்வு=நிறைவு
**********
(இன்னிசை வெண்பா)

வேங்கட ராமனாய் மேதினி புக்கானின்
றீங்கவன் சுற்றநனி இன்புற் றுறவாட
அப்பனும் ஆசானும் ஆனவர வேங்கட
சுப்பன் பயந்த சுதன்.
**********
(கலிநிலைத்துறை)

ஆமா மதியராச் சூடியின் அலரிணை அடியை
ஏமா ருளத்தொடு வழுத்திய இருவருக் கெழில்கூர்
நாமா தருள்வரம் என்றுபின் நானில நவின்ற
கோமா னுதித்தனன் கோதிலாக் குழவியாய் இன்றே.

ஆமா=ஆம் மா; ஆம்=நீர்; மா மதி=அழகிய நிலவு; அரா=பாம்பு; ஏம் ஆர்=மகிழ்வு பொருந்திய;
நாமாது=கலைமகள்
**********
(கட்டளைக்கலித்துறை)

பூரா னொளியுந்தொன் னூறேடி ஆயப் புகுந்தெழுந்தூர்
ஊரா யலைந்து திரிந்தொரு சற்றும் உடற்சிரமம்
பாரா துழைத்துத் தமிழ்ப்பாட்டன் என்னும் பதவிவென்ற
பேரா சிரிய மணிச்சாமி நாதன் பிறந்ததின்றே.

தொன்னூறேடி=தொல் நூல் தேடி
**********

--
வெண்பா விரும்பி

கருத்துகள்