‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை :முதுபெரும் எழுத்தாளர் , கவிஞர் திருச்சி சந்தர்

‘கவியமுதம்’



நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை :காவியக்  கவிஞர் வாலியின் நண்பர் ,முதுபெரும் எழுத்தாளர் , கவிஞர்  திருச்சி சந்தர்

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. மிகத் தரமான தாள்கள் பக்கங்கள் : 172, விலை : ரூ. 100 .பேச  044 - 24342810 /  24310769
மின்னஞ்சல்  vanathipathippakam@gmail.com
*****
முன்னால் உள்ள பக்கங்களில் மறைந்தும் மறையாமல் மறையோதிக் கொண்டிருக்கும் நல்லோர் பற்றி முறையாகக் கவிதை படைத்துள்ளீர்.  பாராட்டுக்கள்.  பின்னால் உள்ள பக்கங்களில் சமுதாயச் சீரழிவுகள் பற்றியும் அதனை சீர்திருத்தும் முறை பற்றியும் எழுதியுள்ளீர்கள்.
நடுவிலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்று கூறவில்லை.  பக்காவாக காதல் காப்பியம் படைத்துள்ளீர்கள், முன்னுக்குப் பின் முரணாக...!?
‘உணர்ச்சிகளைத் தூண்டும் காமமல்ல காதல்’ என்பதை விளக்கிக் காட்டியுள்ளீர், உமது எழுத்தில் தெய்வீகம் தெரிகிறது.
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் – இந்த வரிசையில் தான் வள்ளுவர் திருக்குறளை எழுதினார்.  நீரென்ன புது வள்ளுவரா? அறமறிந்து, இன்பத்தை நுகர்ந்தால் காதலெனும் பொருள் தானாகவே புரிந்து விடும் என விளக்கம் கூறி, உண்மையான காதலுக்கு விளக்கேற்றி வைத்துள்ளீர்.
“அண்ணலும் நோக்கினான் ... அவளும் நோக்கினாள்” நோக்கம் உணர்தலே காதலென்ற கம்பனின் காப்பிய நயம் போல், காதலுக்கு விரசமில்லா விளக்கம் கூறியுள்ளீர்கள்.  நீரென்ன முற்பிறப்பில் கம்பன் வீட்டுக் கட்டுத்தறியா...!
புள்ளி வைத்தும் கோலம் போடலாம்
       கோலம் போட்டும் புள்ளி வைக்கலாம்
       எல்லாமே கோலம் தான்!
      
என்றாலும்

       கண்ணால் புள்ளி வைத்து
       காலால் கோலமிட்டு
       காதலை வெளிப்படுத்திய காதலுரையை
இன்றைய காமவெறியர்களின் காதிலுரைத்தால் நல்லது.

ஆமாம்,      கண்வழி புகுந்து கழுத்தினில் கலந்தவள் யார்?
                     சொல்ல வேண்டாம் ரகசியம் காப்பது தானே
                     புனிதமான காதல்.

கவியமுதத்தில் காதலமுதம் சூப்பர்!

கருத்துகள்