சாதி ! கவிஞர் இரா .இரவி !

சாதி !   கவிஞர் இரா .இரவி !

மக்கள் தொகை 
குறைக்கும் காரணியானது 
சாதி !   

பிறக்கும் போது பிறந்து 
இறந்த பின்னும் தொடருது 
சாதி !   

தொடங்குகின்றது 
கோயில்களில் 
சாதி !   

சங்கம் பல உண்டு 
சங்கமம் என்றுமில்லை 
சாதி !

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் 
பிற்படுத்த வேண்டுகின்றனர் 
சாதி !

தலைவர்களுக்குக் கொண்டாட்டம் 
தொடண்டர்களுக்குத்  திண்டாட்டம் 
சாதி !  

ஆறிலிருந்து ஐந்திற்கு 
இடமாற்றம் அறிவு 
சாதி !  

அகந்தை வளர்த்து 
அழிவைத் தருவது 
சாதி !

வன்முறை வளர்த்து 
நன்மறை அழிப்பது 
சாதி !

வளர்க்கப்படுகிறது 
கிராமங்களில் 
சாதி !    

உயர்ந்தவன் தாழ்ந்தவன் 
என்பது உண்மையில்லை   
சாதி ! 

உசுபேத்தி ரணப்படுத்த 
உதவிடும் 
சாதி !

முன்னோர் பார்க்கவில்லை 
பின்னோர் பார்க்கின்றனர்
சாதி !

அயல்நாட்டில் இல்லை 
அழிவு  தரும் தொல்லை 
சாதி !

தூண்டில் போடவும் 
தூண்டி விடவும் 
சாதி !

பொதுநலம் பேசி 
தன்னலம் வளர்க்கும் 
சாதி !

பயன்படட்டும் 
சமூகநீதிக்கு மட்டும் 
சாதி !

கருத்துகள்