கடவுள் உண்டு இல்லை என்று
தர்க்கத்தில் தொடங்கியது !
கடவுளை ஒதுக்கி வைத்து விட்டு
காதல் மலர்ந்தது அன்று !
எனக்கு என்ன பிடிக்கும்
என்று நீ கேட்க !
உனக்கு என்ன பிடிக்கும்
என்று நான் கேட்க !
எனக்கு பிடித்தவற்றில்
மிகவும் பிடித்தது நீ என்றேன் !
அதே கேள்வி உன்னைக் கேட்டதும்
நீயும் அதனை வழிமொழிந்தாய் !
விதியின் மீது நம்பிக்கையற்றவன் நான்
விதி விளையாடியது பிரித்தது !
உலகின் எங்கோ ஒரு மூலையில் நீ
உலகின் மற்றொரு மூலையில் நான் !
நினைவுகள் மட்டும் அழிவதில்லை
கடல் அலைகள் என வந்து மோதுகின்றன !
.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக