தமிழ் வளர்ச்சித் துறை மதுரை மாவட்டம் நடத்திய ஆட்சிமொழிக் கருத்தரங்கம்

தமிழ் வளர்ச்சித் துறை மதுரை மாவட்டம் நடத்திய ஆட்சிமொழிக் கருத்தரங்கம் !



தகவல் உதவி  நன்றி  .கவிஞர் ,முனைவர் ,காவல் துறை உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன்
29.01.15 ஆம் தேதி பிற்பகல் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை நேற்றும் இன்றும நடத்திய அனைத்துத் துறைப் பணியாளருக்கான பயிலரங்கத்தின் நிறைவு விழாவாக நடந்தேறிய ஆட்சி மொழிக் கருத்தரங்கிற்கு துறைத் துணை இயக்குநர் முனைவர் க பசும் பொன் அவர்கள் அழைப்பின் பெயரில் கருத்துரை வழங்க குறிப்பிட்ட நேரத்திற்கு சற்று முன் கூட்டியேச் சென்றிருந்தேன்.

பயிலரங்கம் நடத்திய திண்டுக்கல் தமிழாசிரியர் திரு தமிழ்ப் பெரியசாமி அவர்கள் இலக்கணத்தை இலகுவாகக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.இன்னும் கொஞ்சநேரம் நடத்த மாட்டாரா என்னும் அளவில் இருந்தது.

பல்வேறுத் துறைப் பணியாளரும் அவர் நடத்திய வினாடி வினாப் போட்டியில் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு பதிலளித்தது தமிழார்வம் நம்மவரிடம் இன்றும் குறையவில்லை என்பதை பறை சாற்றியது.

நிகழ்ச்சியில் மேனாள் கலைப் பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் திரு சுலைமான், என் நெஞ்சினிற்கினிய உதவி சுற்றுலா அலுவலர் ஹைகூ கவிஞர் திரு இரா. இரவி, முனைவர் ஞா. சந்திரன் ,முனைவர் கபிலர் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டு கருத்துக்கள் வழங்கினேன். ஆர்வத்துடன் ஏற்றார்கள்.

பயிலரங்கில் கலந்துகொண்ட பயிற்சியாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ், பரிசு பெற்றோருக்கு பரிசு மற்றும் கேடயங்களை மாவட்ட வருவாய் அலுவலர் தமிழ்த்திரு கூ. வேலுச்சாமி வழங்கிச் சிறப்பித்தார்.

தமிழ், சங்கம் வளர்த்த மதுரை அரசுப் பணியாளரிடம் மேலும் வளர இப் பயிலரங்கம் கட்டியம் கூறியது என்றால் மிகையாகாது.

எந்தவொரு செயலிலும் தனி முத்திரைப் பதிக்கும் மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் தமிழ்த்திரு முனைவர் க. பசும் பொன் அய்யா தனது துறை அறிஞர்கள் நெல்லை மண்டலத் துணை இயக்குநர் திரு கபிலர்,தூத்துக்குடித் துணை இயக்குநர் முனைவர் திரு சின்னச்சாமி ஆகியோர் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நடத்தி தமிழ் தொண்டாற்றினார்.

நாட்டுப் பண்ணோடு விழா இனிதே நிறைவுற்றது.

தமிழ் வளர்ச்சித் துறையினருக்குப் பாராட்டுக்கள்.

கருத்துகள்