தரணியில் தமிழராகப் பிறந்ததற்கு ஓவ்வொரு
தமிழரும் மனதளவில் பெருமை கொள்வோம் !
உலகின் முதல் மொழி நம் தாய் மொழி தமிழ் !
உரைப்பது அமெரிக்காவின் மொழி ஆய்வாளர் !
உலகப் பொதுமறையை உலகிற்கு தந்த மொழி !
உலகம் வியக்கும் ஒப்பற்ற மொழி நம்தமிழ் !
திருக்குறள் வழி நடந்து பாருங்கள் !
தித்திக்கும் வாழ்க்கை வசமாகும் !
ஆத்திசூடி படித்துப் பாருங்கள் நீங்கள் !
அத்தனையும் அற்புதம் சொல்அமுதம் !
கொன்றைவேந்தன் படித்துப் பாருங்கள் !
குவலயத்தில் சிறப்பாக வாழலாம் !
தொடக்கக் கல்வி தமிழில் கற்றவர்களே !
தொட்டார்கள் சிகரம் சாதனைகளில் !
பயிர் வளரத் தேவை இயற்கை உரம் !
உயிர் வளரத் தேவை இனிய தமிழ்உரம் !
பண்பாடு பயிற்றுவிககும் தமிழ் !
பண்பாடு உலகிற்கு உணர்த்தும் தமிழ் !
வந்தாரை வரவேற்பவன் தமிழன் !
வாய்ப்பு வழங்கி உதவுபவன் தமிழன் !
உலகம் முழுவதும் வாழ்பவன் தமிழன் !
உலகம் பாராட்டும் ஒப்பற்ற தமிழன் !
சாதி மதம் உடன் மறப்போம் !
சங்கத் தமிழால் இணைவோம் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக