பிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்ச் சொல்லாகும் ஏன் சொன்னார் தொல்காப்பியர் ? கவிஞர் இரா .இரவி !
பிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்ச் சொல்லாகும் ஏன் சொன்னார் தொல்காப்பியர் ?
கவிஞர் இரா .இரவி !
தொலைநோக்கு சிந்தனையாளார் நம் தொல்காப்பியர்
தொல்காப்பியத்தில் அன்றே எழுதி வைத்தார் !
தொல்காப்பியத்தில் அன்றே எழுதி வைத்தார் !
பிறமொழி எழுத்துக்களைக் கலப்பது தீங்கு !
பைந்தமிழ் எழுத்துக்களே தமிழுக்குப் போதும் !
பைந்தமிழ் எழுத்துக்களே தமிழுக்குப் போதும் !
வடமொழி எழுத்துக்கள் வண்டமிழைச் சிதைக்கும் !
வளமான தமிழுக்குத் தேவையில்லை பிறஎழுத்துக்கள் !
வளமான தமிழுக்குத் தேவையில்லை பிறஎழுத்துக்கள் !
ரோஜா என்று என்றும் எழுதாதீர்கள் !
ரோசா என்றே என்றும் எழுதங்கள் !
ரோசா என்றே என்றும் எழுதங்கள் !
இராஜா என்று என்றும் எழுதாதீர்கள் !
இராசா என்றே என்றும் எழுதங்கள் !
இராசா என்றே என்றும் எழுதங்கள் !
இரமேஷ் என்று என்றும் எழுதாதீர்கள் !
இரமேசு என்றே என்றும் எழுதங்கள் !
இரமேசு என்றே என்றும் எழுதங்கள் !
கிருஷ்ணன் என்று என்றும் எழுதாதீர்கள் !
கிருட்டிணன் என்றே என்றும் எழுதங்கள் !
கிருட்டிணன் என்றே என்றும் எழுதங்கள் !
ஜெயம் என்று என்றும் எழுதாதீர்கள் !
செயம் என்றே என்றும் எழுதங்கள் !
செயம் என்றே என்றும் எழுதங்கள் !
எழுத்துக்கள் கலந்தாலென்ன எண்ணாதீர்கள் !
எழுத்துக்கள் கலந்தால் பாழாகும் நம் மொழி !
எழுத்துக்கள் கலந்தால் பாழாகும் நம் மொழி !
கிராமத்து உச்சரிப்பில் வாழ்கிறது தமிழ் !
நகரத்து உச்சரிப்பில் வீழ்கிறது தமிழ் !
நகரத்து உச்சரிப்பில் வீழ்கிறது தமிழ் !
பிறமொழி எழுத்துக் கலப்பு ஒழியட்டும் !
நம்மொழி எழுத்துக்கள் மட்டும் ஓங்கட்டும் !
.
நம்மொழி எழுத்துக்கள் மட்டும் ஓங்கட்டும் !
.
கருத்துகள்
கருத்துரையிடுக