கவிஞர் இரா .இரவி

உலகப் புகழ் இணையத்தில் http://www.tamilauthors.com

 கவிஞர் இரா .இரவி 



இரா.இரவி
21.வன்னியக் கோனார் சந்து,
வடக்கு
 மாசி வீதி,
மதுரை
  625001 இந்தியா.தொலைபேசி: 919842193103
E.mail: eraeravik@gmail.com


படைப்பாற்றல் கவிதை
படைப்புக்கள்:
  • கவிதைச் சாரல் - 1997
  • ஹைக்கூ கவிதைகள் - 1998
  • விழிகளில் ஹைக்கூ - 2003
  • உள்ளத்தில் ஹைக்கூ - 2004
  • நெஞ்சத்தில் ஹைக்கூ - 2005
  • என்னவள் - 2005
  • இதயத்தில் ஹைக்கூ - 2007
  • கவிதை அல்ல விதை – 2007
  • மனதில் ஹைக்கூ   - 2010
  • ஹைக்கூ ஆற்றுப்படை - 2010
  • சுட்டும் விழி  - 2011
  • ஆயிரம் ஹைக்கூ 2013
  • புத்தகம் போற்றுதும்  - 2014
  • கவியமுதம்  - 2014 
சிறப்புக்கள்
  • 26-01-92 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர்களுக்கான விருதினை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரிடமிருந்து பெற்றுள்ளார்.
  • சிறந்த நூலிற்கான பரிசினை புதுவை துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.
  • புதுவை எழுத்தாளர் சங்கம் ஹைக்கூ கவிதை நூல் சிறந்த நூலாக தேர்வு செய்து பரிசும் பாராட்டுச் சான்றிதழும் புதுவைஆளுனர் முன்னிலையில் ஆளுனர் மாளிகையில் புதுவை துணைவேந்தர் வழங்கினார்.
  • லண்டன் தமிழ் இலக்கிய மன்றம் உலக அள்வில் நடத்திய கவிதைப் போட்டியில் பரிசும் பாராட்டுச் சான்றிதழும்பெற்றுள்ளார்.
  • லண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலகளாவிய ரீதியில் நடத்திய கவிதைப் போட்டி - இருதடவைகள் பரிசுபெற்றார்.
  • மதுரை நகைச்சுவை மன்றத்தின் ஆண்டு விழாவில் முனைவர் கலைமாமணி குஞானசம்பந்தன் அவர்களிடமிருந்துவளரும் கலைஞர் விருது பெற்றுள்ளார் .
  • கணித்தமிழ் சங்கம் மதுரையில் நடாத்திய கணிப்பொறித் திருவிழாவில் ' தமிழும் அறிவியலும் ' என்ற தலைப்பிலானகவிதைப் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளார்.
  • டில்லி ' மக்கள் காப்புரிமை ' மாத இதழ் நடாத்திய கட்டுரை போட்டியிலும் பரிசு பெற்றுள்ளார்.
  • மனிதநேய் அறக்கட்டளையின் சார்பில் மனித 'நேயப்படைப்பாளர் ' விருது பெற்றுள்ளார்.
  • கவியருவி, கவிச்சிங்கம், கவிச்சூரியன், ஹைக்கூ திலகம் எனப் பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார்.
  • நகர் முரசு வார இதழின் சார்பில் சிறந்த ஹைக்கூ கவிஞர் விருது பெற்றுள்ளார்.
  • 27.9.2014ல் ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80 வது பிறந்த நாள் விழா கவிமுகில் அறக்கட்டளைமற்றும் விழிகள் பதிப்பகம் இணைந்து சென்னையில் நடத்திய மாபெரும் விழாவில் எழுத்தோலை விருது சிலம்பொலிசெல்லப்பன் அவர்களால் கவிஞர் இராஇரவிக்கு வழங்கப்பட்டது.
இவரைப் பற்றி:
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் உதவி சுற்றுலா அலுவலராக மதுரையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப்பணிகளும் செய்து வருகின்றார்.  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலில் இவரது 9 ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றிருக்கிறதுமதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலில் இவரது 10 ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன . விருதுநகர்வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி பாட நூலில் இவரது 2 ஹைக்கூ இடம் பெற்றுள்ளனமதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலில் 2014 ஆண்டில் இரண்டாம் முறையாக இரண்டுஹைக்கூ இடம் பெற்றுள்ளன

கருத்துகள்